அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

செவ்வாய், 20 ஜூலை, 2010


உள்ளாட்சி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியினர் அராஜகம்

தமிழகத்தில் காலியாக இருக்கும் உள்ளாட்சி இடங்க ளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. திருச்சி 28&வது வார்டுக்கான தேர்தலில் திமுகவும், மனிதநேய மக்கள் கட்சியும் நேரடியாக மோதுகின்றன. அங்கு மனிதநேய மக்கள் கட்சியினர் வெற்றிபெறும் நிலை யில் உள்ளதால், ஆளும் திமுக வினரால் அதை ஜீரணிக்க முடியவில்லை.அமைச்சர் நேரு களத்துக்கு நேரடியாக வரக்கூடிய அளவுக்கு நிலை ஏற்பட்டுவிட்டதால், திமுகவினர் வழக்கம்போல் குறுக்கு வழியில் செயல்படுகின்றனர்.

ஜூலை 18 அன்று இரவு சுமார் 200 திமுகவினர், ரவுடிகளின் துணையோடு முஸ்லிம்கள் வாழும் பகுதிகளுக்கு வந்து வேட்டி, புடவை, பணம் என வினியோகிக்க முயன்றபோது, அப்பகுதி பொது மக்கள் திமுகவினரை ஓட, ஓட விரட்டியுள்ளனர்.இதனால் கொதித்துப் போன திமுகவினர், அப்பகுதி முஸ்லிம் களை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். அப்பகுதி ஜமாத் தினரே அரண்டு போகும் அளவுக்கு திமுகவினரின் செயல்பாடுகள் இருந்ததாக பொதுமக்கள் கூறுகின் றனர். இதனிடையே திருச்சி ஏர்போர்ட் பகுதி மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகி பகுருதீன் அவர்கள் மீது திமுகவினர் கொலை வெறித் தாக்குதல் நடத்தி, அவரது காரை உடைத்துள்ளனர்.

படுகாயமடைந்த பகுருதீனை அப்பகுதி மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர்.அங்கு பிரச்சார களத்தில் இருந்த மாநில த.மு.மு.க துணைச் செயலாளர் கோவை.சாதிக் தலை மையில் த.மு.மு.க, மற்றும் ம.ம.க நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு சென்றனர்.ம.ம.கவின் திருச்சி மாவட்ட செயலாளர் பஷீரின் வீட்டுக் கதவையும் திமுகவினர் தட்டி பெண்களை மிரட்டியுள்ளனர்.திமுகவினர் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை செய்த செய்தி பரவியதால், திருச்சி பதற் றமானது. பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன.உடனடியாக உதவி ஆணை யாளரிடம் சென்று மமகவின் சார்பில் முறையிடப்பட்டது. அதை பட்டும்படாமல் கேட்டுக் கொண்டவர், எந்த பதிலும் சொல்லாமல், அமைச்சர் நேருவுக்கு விசுவாசம் காட்டும் விதமாக, விடை பெற்று சென்றிருக்கிறார்.

பகுருதீனை தாக்கிய திமுகவினர் கைது செய்யப்படவில்லை. ஆனால் மமக மாவட்ட செயலாளர் பஷீர், த.மு.மு.க மாவட்ட செயலாளர் ஃபைஸ், மமக தலைவர் ஹக்கீம், துணைச் செயலாளர் இப்ராஹிம் ஷா உள்ளிட்ட 75 பேர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.நிலைமையை நேரில் அறிய மமக பொதுச் செயலாளர் பி.அப்துல் சமது திருச்சிக்கு சென்றார்.தோல்வி பயத்தில் வாக்காளர் களுக்கு பணம் கொடுக்க வந்த திமுகவினரை அடையாளம் காட்டியும் கூட அவர்கள் மீது நடவடிக்கை இல்லை.

நல்ல தேர்தல்! நல்ல ஜனநாயகம்! நல்ல போலீஸ்!

நன்றி - தமுமுக இணையதளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக