
தீவிரவாதத்தை தடுக்க அனைவரும் முன் வரவேண்டும் முத்துப்பேட்டையில் முன்னாள் மத்திய மந்திரி திருநாவுகரசு பேச்சு.
முத்துப்பேட்டை ஜூலை - 21-
முத்துபேட்டையில் மதநல்லிணக்க விழா
முத்துபேட்டையில் மதநல்லிணக்க விழா மற்றும் ஆறாம் ஆண்டு மாநில அளவிலான கைபந்து விளையாட்டு போட்டி நடந்தது. விழாவிற்கு விழா கமிட்டி தலைவர். ஜே.ஷேக்பரீத் தலைமை தாங்கினார். முன்னதாக கமிட்டி செயலாளர்கள் தீன்முகம்மது, ஷாஹுல்ஹமீது வரவேற்று பேசினர். நிகழ்ச்சிக்கு மருதுபாண்டியர் பேரவை மாநில தலைவர் எம்.கே.செந்தில், திருத்துறைபூண்டி சட்டமன்ற இளைஜர் காங்கிரஸ் தலைவர் சதா.பாலகுகநாதன், பொது செயலாளர் முகைதீன் பிச்சை, பேட்டை கிராம கமிட்டி தலைவர் கவுதமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முன்னாள் மத்திய மந்திரி சு.திருநாவுகரசு கலந்து கொண்டு பேசியதாவது:-
எல்ல மதங்களும் அன்பு பாராட்டத்தான் கூறுகிறது. சாந்தியையும் சமாதானத்தையும், சகோதரத்தையும் வலியுறுத்துகிறது. மனிதர்கள் அன்பு பாராட்ட வேண்டும். மனிதர்கள் ஒன்றாக வாழ வேண்டும் என்று தான் மதங்கள் கூறுகின்றன. இந்திய சுதந்திரத்துக்கு அனைத்து மதத்தினரும் பாடுபட்டு உள்ளனர். இந்திய சுதந்திரத்தில் அனைவருக்குமே பங்கு இருக்கிறது. மொழி வளர்ச்சியிலும் பங்கு இருக்கிறது. இந்திய இறையாண்மைக்கு தீங்கு விளைவிக்கும் தீவிரவாதம் எங்கு இருந்து வந்தாலும் நாம் மத வேறுபாடு காட்டாமல் அவற்றை எதிர்த்து அளிக்க வேண்டும். தீவிரவாதம் அழிந்தால்தான் நாடு சுபிட்ச்சமாக இருக்கும். எனக்கு இஸ்லாமியர் என்றால் ரொம்ப பிடிக்கும். என்னை வெற்றி பெற வைத்தது இஸ்லாமியர்கள்தான். சில நாட்களாக இஸ்லாமிய கூட்டத்தை காணமுடியாத சூழல் ஏற்ப்பட்டு விட்டது. இப்போது காணும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் கவிஜர் பசீர் அஹ்மத், ராகுல் காந்தி பேரவை தலைவர் சிவக்குமார், முன்னாள் இளைஜர் காங்கிரஸ் தலைவர் டாக்டர்.ரவீந்தரன், ரோட்டரி சங்க ஆளுநர் கிருச்னமூர்த்தி, பேரூராட்சி கவுன்சிலர்கள் மெட்ரோ மாலிக், ரசூல் பீவி, காங்கிரஸ் மாவட்ட பொது செயலாளர் பகுருதீன், செயலாளர் சுந்தர ராமன், பின்னத்தூர் முன்னாள் ஊராட்சி தலைவர் சுப்பையன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முடிவில் விழா கமிட்டியினர் முஜிபுர்ரகுமான், ஜனுபார்தீன், சித்திக் அஹமது ஆகியோர் நன்றி கூறினர்.
நன்றி - தினத்தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக