
திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க., - இந்திய கம்யூ., - மா.கம்யூ., உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால், மாவட்டத்தில் தி.மு.க.,வுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க.,வில் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்பதால் வருத்தம் அடைந்த ஒரத்தநாடு தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., அழகு திருநாவுக்கரசு, கடந்த மாதம் முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தி.மு.க.,வில் சேர்ந்தார். மன்னார்குடியைச் சேர்ந்த இவர் ஒரு முறை அமைச்சராகவும் இருந்தார்.தி.மு.க.,வில் இணைந்த அழகு திருநாவுக்கரசு தலைமையில் 30 ஆயிரம் தொண்டர்கள் தி.மு.க.,வில் இணையும் விழா நாளை (26ம் தேதி) மன்னார்குடியில் நடத்துவற்கான பணிகள் நடக்கிறது. துணை முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு தி.மு.க.,வில் இணைபவர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை வழங்குகிறார்.
நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் 17வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இ.கம்யூ., உறுப்பினர் வெற்றி பெற்றுள்ளார். திருவாரூர் மாவட்டத்தில் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்தலில் அனைத்து இடங்களிலும் அ.தி.மு.க., - இந்திய கம்யூ., - மா.கம்யூ., உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதனால், மாவட்டத்தில் தி.மு.க.,வுக்கு சரிவு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக