அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 26 ஜூலை, 2010


முத்துப்பேட்டையில் ஜவுளிக்கடையில் தீ விபத்து ரூ.மூன்று லட்சம் மதிப்புள்ள துணிகள் எரிந்து சாம்பல்.

முத்துப்பேட்டை - ஜூலை - 26-

முத்துப்பேட்டையை அடுத்த தம்பிகோட்டை வடகாட்டை சேர்ந்தவர் ஜீவானந்தம் இவர் முத்துப்பேட்டை செம்படவான்காட்டில் உள்ள ரயில்வே கேட் அருகில் ஜவுளிக்கடை நடத்திவருகிறார். நேற்று முன்தினம் இரவு விற்பனை முடிந்தவுடன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். நள்ளிரவு ஒரு மணியளவில் திடீரென ஜவுளிக்கடையில் தீ பிடித்து எரிந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் ஜீவானந்தம் கடைக்கு ஓடிவந்து திறந்து பார்த்துள்ளார்.

அப்போது கடையில் இருந்த துணிமணிகள்,அழகு சாதனபொருட்கள் அனைத்தும் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. இது குறித்து தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் ரூ.மூன்று லட்சம் மதிப்புள்ள துணிமணிகளும்,அழகுசாதனபொருட்களும் எரிந்து நாசமாகின.

இது குறித்து ஜீவானந்தம் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் கூடுதல் போலிஸ் சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் , சப்- இன்ஸ்பெக்டர் ஆனந்தகிருஷ்ணன் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டு தீ விபத்து காண காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த தீவிபத்து மின்கசிவு காரணமாக ஏற்ப்பட்டதா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

-- தினத்தந்தி --

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக