கூட்டத்துக்குள் ஆம்புலன்ஸ் புகுந்ததால் பா.ஜனதா ஆர்ப்பாட்டத்தில் தள்ளு முள்ளு - போலீஸ் தடியடி கடைகள் அடைப்பு!!
திருத்துறைப்பூண்டி -
பாரதீய ஜனதா கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டத்தின் போது ஆம்புலன்ஸ் புகுந்ததால் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர். கடைகள் அடைக்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி வடக்கு வீதியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் கல்வி நிலையங்களில் இந்து மாணவர்களுக்கு சம நீதி மற்றும் நிதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்பாட்டத்திற்கு மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
இதில் மூன்றாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். ஆர்பாட்டம் நடைபெறுவதையொட்டி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
கூட்டத்துக்குள் புகுந்த ஆம்புலன்ஸ்
ஆர்பாட்டத்தில் மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் பேசிகொண்டிருந்த போது ஆம்புலன்ஸ் ஒன்று கூட்டத்துக்குள் புகுந்தது. இந்த ஆம்புலன்ஸ் வாகனத்துக்குள் நோயாளிகள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. சைரன் ஒலியுடன் ஆம்புலன்ஸ் வாகனம் விரைந்து வந்ததால் மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் ஆம்புலன்சுக்கு வலி விட்டு அமைதியாக இருக்கும்படி கேட்டுகொண்டார். ஆனால் ஆம்புலன்சில் யாரும் இல்லாததால் தொண்டர்கள் சிலர் ஆவேசமடைந்து ஆம்புலன்ஸ் வாகனத்தை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். இதனை பார்த்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் ஆர்பாட்டகுளுவினரை கட்டுபடுத்த முயற்சித்தனர்.
போலிஸ் தடியடி
இதற்கிடையே போலீசாருக்கும்,தொண்டர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாததால் போலீசார் தடியடி நடத்தினர். இந்த மன்னார்குடி துணை போலிஸ் சூப்பிரண்டு குணசேகரின் கார் கண்ணாடி பா.ஜா.க தொண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டது .போலிஸ் தடியடியில் பா.ஜா.க தொண்டர்கள் ஆறு பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு திருத்துறைபூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை கண்டித்தும், சம்மந்த பட்டவர்களை கைடு செய்ய வலியுறுத்தியும் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு பிரவின்குமார் அபிநபுவிடம் மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் நேரில் வலியுறுத்தினார்.
ஆம்புலன்ஸ் வாகனம் உடைப்பு
இந்நிலையில் ஆம்புலன்ஸ் வாகனம் வடக்கு வீதியை கடந்து ஆஸ்பத்திரி ரோடு என்ற இடம் அருகே சென்ற போது ஒரு கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டது. அந்த ஆம்புலன்ஸ் தமுமுகவினருக்கு சொந்தமானது என்று கூறப்படுகிறது.
உள்ளிருப்பு போராட்டம்
இதற்கிடையே பாரதீய ஜனதா கட்சியினர் மீது தடியடி நடத்திய சம்பவத்தை கண்டித்து மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் தலைமையில் கட்சி நிருவாகிகள் திருத்துறைபூண்டி காவல் நிலையத்திருக்கு சென்று சம்மந்த பட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி அவர்கள் அனைவரும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏராளமான தொண்டர்கள் போலிஸ் நிலையத்தில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்ப்பட்டது.
திருவாரூர் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு பிரவின்குமார் அபினபு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.அப்போது ஆர்ப்பாட்டத்தில் நுழைந்த ஆம்புலன்ஸ் வாகனம் குறித்து சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அதன் பேரில் பாரதீய ஜனதா கட்சியினர் உள்ளிருப்பு போராட்டத்தை கைவிட்டனர்.
தினத்தந்தி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக