அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

சனி, 17 ஜூலை, 2010

சச்சார் அறிக்கை முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?

வேடிக்கையான ஒரு முல்லா கதை இருக்கிறது.சமூகத்தில், முல்லா என்றாலே வேடிக்கை என்றாகிப்போனது ஏன்? என்ற கேள்வி அவ்வப்போது எனக்குள் எழுவதுண்டு! அப்படியெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் சில அருமையான விசயங்களை ரசிக்கம முடியாமல் போய்விடும் என்பதால் அதைப்பற்றி அதிகம் யோசிப்பதில்லை।உங்களுக்கும் அப்படி ஒரு கேள்வி எழுந்தால் அதை ஒரு புறமாக ஒதுக்கி வைத்து விட்டு இந்த கதையை படியுங்கள்!

ஒரு விடுமறை நாளில், முல்லா இறைச்சிக் கடைக்குச் சென்று அரைக்கிலோ ஆட்டுக்கறி வாங்கினார்। பக்கத்திலிருந்த ஒரு புத்தகக் கடைக்குள் நுழைந்து ஆட்டிறைச்சி சமைப்பது எப்படி என்றொரு செய்முறைப் புத்தகத்தையும் வாங்கினார். பெருமிதத்தோடு அவர் நடந்து கொண்டிருந்த போது ஒரு தெரு நாய் அவரது கையிலிருந்த கறிப்பையை பறித்துக் கொண்டு ஓடியது. தெருவில் இந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் பலரும் பதறினார்கள். நாயை துரத்திக் கொண்டு ஒடினார்கள். முல்லா மட்டும் பதறவில்லை ஒடவுமில்லை. குறுக்கே வந்த ஒருத்தன் ஏம்பா! நாய் உன் இறைச்சிப் பையயை தூக்கிக் கொண்டு போகிறது நீ பதறாமல் நிற்கிறாயே என்று கேட்டான்.
முல்லா சொன்னாராம். நாய் கறியைக் கொண்டு போனாலும் செய் முறை புத்தகம் என்னிடம் தானே இருக்கிறது.


கடந்த மாதம் தமிழகத்தின்; பல பகுதியிலும் சச்சார் கோஷம் ஒலித்ததை கேட்க நேர்ந்த போது இந்தக்கதை ஞாபகத்தில் வந்து இடறியது.ஏதேனும் ஒரு தீர்பபோ அறிக்கையோ கிடைத்துவிட்டால் அந்த காகிதங்களை கவனமாக உடும்பும்புபிடியாகப் பிடித்தக்கொண்டு காரியத்தில் கோட்டை விட்டுவது நம்முடைய முஸ்லிம் சமுதாயத்தின் பழக்கமாயிற்றே. இந்த சச்சார் அறிக்கையும் அப்படி ஒரு சராசரி கோஷமாக கறைந்து போய்விடுமோ என்ற கவலையின் விளைவாக இந்த இடறல் நேர்ந்திருக்கலாம்.முஸ்லிம்களுக்கு ஒரு கோஷம் கிடைத்துவிட்டால் ஓரு வகை கிளர்ச்சியும் போலித்தனமான எழுச்சியும் அந்த கோஷத்தின் பின்னணியில் வெளிப்படும். அறிவார்த்தமான அணுகுமுறைகளோ தீர்க்கமான திட்ட மிடுதல்களோ இல்லாமல் ஒரு பயணற்ற ஆடம்பர வெளிப்பாடாக அது முடிந்து போய்விடும்.
சச்சார் அறிக்கையும் அப்படியொரு நீர்குமிழியாக வண்ணமயமாக தெரிந்து பிறகு கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்து பொய்விடக் கூடாது.60 ஆண்டு கால சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முஸ்லிம்களை பற்றி தனியாகவும் வெளிப்படையாகவும் தெளிவாகவும் இத்தகைய தொரு அறிக்கை எந்த ஒரு அரசு சார்பாகவும் வெளியிடப்பட்டதில்லை.இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட சில ஆய்வுக்குழக்ககள் பத்தோடு பதினொன்றானத்தான் முஸ்லிம்களைப்பற்றி பேசின.முஸ்லிம்களின் இன்றைய சமூக பொரளாதார கல்வி நிலைகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையாக சச்சர்க்குழ வெளியிடட்ட தகவல்கள், சமுதாயத்தை ஆட்டம் காணச் செய்துவிட்டன.
அரசியல் அதிகாரம் பெறுவதில் விலக்கிவைக்கப்பட்டதில் தொடங்கி, உயர்கல்விக்கான வாசல்கள் மூடப்பட்டதில் தொடர்நது பொருளாதார வளத்துக்கான வாய்ப்புகள் வழங்கப்படாததில் முடங்கி முஸ்லிம் சமுதாயம் எப்படி மோசமமாக பின்னடந்தள்ளளது அல்லது பின்னுக்கு த்தள்ளப்பட்டுள்ளது என்பதை வேதனையளிக்கிற புள்ளிவிபரங்களோடு அவர் தெரிவத்துள்ள கருத்துக்கள் இன்றைய முஸ்லிம் சமதாயத்தின் விழிகளை வலக்கட்டாயமாக திறந்து வைக்க போதுமானதாகும். முஸ்லிம்களின் நிலையை பிட்டு வைத்த சச்சார் குழு, ஒரு முழமையான தீர்வை சொல்லியிருக்கிறதா என்பதில் ஒரு சில சர்ச்சைகள் இருக்கிறது என்றாலும் ஒரு பெதுநோக்கில் பார்க்கையில் சச்சாரின் அறிக்கை முஸ்லிம்களின் புண்பட்ட மனதுக்கு நம்பியளிக்கிற இதமான ஒரு ஒத்தடத்தை பதிவு செய்தள்ளது.
என்பது மறுக்க முடியாத உண்மை. இந்தச் சூழ்நிலையில் சச்சார் அறிக்கை குறித்த விளக்கக் கூட்டங்கள் நடத்துகிற முஸ்லிம்கள், அவர்களது வரலாற்று வாடிக்கைப்படி சச்சாருக்கு ஒரு அச்சா போட்டுவிட்டு அமைதியடைந்து விடுவார்கள் என்றால் கடைசிப் பேருந்தை தவற விட்ட வெளியுர்க்காரனப்போல தவிக்ககிற நிலைக்குத் அவர்கள் தள்ளப்படுவார்கள். எனவே இந்த அறிக்கை குறித்து வழக்கத்தை விட சற்று அதிகமாக யோசிப்பதற்கும் இவ்வறிக்கையின் அடிப்படையில் ஒரு செயல்திட்டத்தை வகுத்துச் செயல்படுவதற்கும் முஸ்லிம்கள் கடமைப்பட்டிருக்கிறார்கள். முதலில் சச்சார் குழு என்பது என்ன?
எந்த நோக்கத்தில் அதனுடைய அறிக்கை தேசத்தின முன்னிலையில் வைக்கப்பட்டள்ளது? அதன் ஆய்வு முடிவுகள் என்ன சொல்கிறது? என்னென் பரிகாரங்கள் செய்யப்பட வேண்டும் என்று அது அரசாங்கத்தை கேட்டுக் கொண்டிருக்கிறது? என்பதை அறிந்து கொள்ள வேண்டியது முஸ்லிம்கள் வாழ்கிற ஒவ்வொரு மஹல்லாவிலும் இருக்கிற ஆலிம்கள், ஜமாத் பொறுப்பாளர்கள், சமூகத்திற்கு எதையவது செய்ய வேண்டும் என்று நினைக்கிற சமூக சேவர்கள் அனைவருடயை கடமையாகும். மருத்துவம் படிப்பது பர்ளு கிபாயா (சமுதாயக கடமை) என்றுசொல்லும் சமூகத்தில் வாழ்கிற முஸ்லிம்கள் இந்த அறிக்கையின் அடிப்படை அம்சங்களை விளங்கிக்க கொள்வதும் பர்ளு கிபாயா என்று சொன்னால் அது தவறாகாது.
மத்திஅரசை ஆண்டு கொண்டிருக்கிற ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள், தமது குறைந்த பட்ச பொதுத் திட்ட அறிக்கையில் முஸ்லிம்களின் நிலையை ஆய்வு செய்வதற்கு ஒர் குழு அமைத்து அக்குழு தரும் பரிந்துரைகளின் அடிப்படையில் முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் வகுக்கப்படும் என்று கூறியிருந்தன. அதன் அடிப்படையில் 2005 மார்ச் ஒன்பதாம்; தேதி தில்லி உயர்நீதி மன்ற நீதிபதி ராஜீந்தர் சச்சார் தலைமையில் சையத் ஹமீத், டாக்டர் டி.கே.ஊமன்,எம்.ஏ. பாஸித், டாக்டர் அக்தர் மஜீத், டாக்டர் அபுசாலிஹ் ஷரீப், டாக்டர் ராகேஷ் பாஸந்த ஆகிய 7 நபர்களைக் கொண்ட ஒரு உயர்மட்டக்குழ அமைக்கப்பட்டது.
முஸ்லிம்களின் சமூக பொருளாதார கல்வி நிலைகளைப்பற்றி ஆராய்ச்சி செய்து அவர்களின் முன்னேற்றத்திற்கு தகுந்த பரிந்துரைகள் வழங்க வேண்டும் என்பது இக்குழவிற்கு இடப்பட்ட பணியாகும். இக் குழு நாடுமுழுவதும் பயணம் செய்து அனைத்து அரசுத்துறைகள்,; அரசு சார்பு நிறுனங்கள் தனியார் அமைப்புக்கள் உள்ளிட்ட சுமார் 500 அமைப்புக்களோடு தொடர்பு கொண்டு முஸ்லிம்களின் பொருளாதார சமூக கல்விச் சூல்நிலைகளைப்பற்றி தகவல்கள திரட்டியது. அதன் அடிப்படையில் ஆய்வு செய்து விரிவான 12 அத்தியாயங்களை கொண்ட சுமார் 417 பக்க அறிக்கையை 2006 நவம்பர் 18 ம் தேதி அன்று பிரதமரிடம் சமாப்பித்தது.
நவம்பர் 30 ம் தேதி இவ்வறிக்கையை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ ஆர் அந்துலே நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அத்தோடு இவ்வறிக்கையின் அடிப்படையிலான செயல்பாடுகள் 2007 பிப்ரவரி முதல் தொடங்கும் என்றும் கூறினார். இந்தக் கட்டத்தில் முஸ்லிம்களின் நிலை குறித்து ஒரு அறிக்கையை கேட்டுப் பெறுகிற ஒரு நிலைக்கு இந்திய அரசு தள்ளப்பட்டதற்கு என்ன காரணம் என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.
இந்தியா கடந்த 20 ஆண்டுகளில் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. ஓரு இந்தியக் குடிமகன் தேசத்தின் எந்த மூளையில் உட்கார்ந்து கொண்டிருந்தலும் இந்த வளர்ச்சியை உணர முடியும். இருபது ஆண்டுகளுக்கு முன்பு சொந்தமாக கார் பங்களா வைத்திருந்தோரின் எண்ணிக்கை என்ன? இன்று அந்த வளர்ச்சியை தொட்டுவிட்டவர்களின் எண்ணிக்கை எனன ? கலர் டிவி யும் செல் போனும் எவ்வளவு இலகுவாக வாங்கும் பொருட்களாகிவிட்டன? இந்திய இளையர்களின் சம்பாத்திய வேகம் எத்தனை நூறு மடங்கு உயர்ந்திருககிறது? படித்த இளைஞர்கள் வேலை தேடி நிறுவனங்களின் வாசல்களில் காத்திருந்த நிலை மாறி கல்லூரிகளின் எல்லைகளுக்குள்ளேயே வேலைக்கான அனுமதி, அதிலும் உயர்ந்த சம்பளம் பெறுகிற வேலைக்கான அனுமதி கிடைத்துவிடுகிற என்னவொரு அற்புதமான சூழ்நிலை உருவாகியிரக்கிறது ? பஞ்சைப்பராரிகளின் தேசம் என்று இழிவாக கருதப்பட்ட தேசம் இன்று எப்படி துடிப்புமிக்க் பட்டதாரிகளின் தேசமாக உருவெடுத்திருக்கிறது?
இத்தனை வளர்ச்சிகள் இங்கு இருந்தாலும் இந்த வளர்ச்சியின் சுவை அனுபவித்திராத ஒரு சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் இருக்கிறது. நாடு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த நாட்டின் இரண்டாவது பெரும் சமுதாயமமான முஸ்லிம் சமுதயாம் பெரும் பின்னடைவில் இருக்கிறது. இது தேசத்திற்கு நல்ல செய்தி அல்ல. ஒரு கப்பலில் இரண்டு பேர் நோயாளிகள் என்றால் அது இருந்து விட்டுப் போகட்டும் என்று விட்டுவிடுகிற விசயமல்ல.நலிவடைந்தவர்களின் நலம் நாடுவதும் அவர்களை உயரச் செய்வதம் மனிதாபிமானம் என்ற தளத்தில் மட்டுமல்லாமல் பாதுகாப்பு, பொது அமைதி என்ற தளத்திலும் முக்கியமக கவனிக்கப்பட வேண்டிய விசயங்களாகும். 2020 க்குள் ஆயத பலதிலும் பொருளாதார வளத்திலும் அறிவியல் திறத்திலும் வல்லரசாகவிடுகிற கனவோட விரைந்து கொண்டிரக்கிற ஒரு தேசம் தன்னுடைய அடித்தட்டு சமூக மக்களை ஆட்டம் காண்கிற நிலையிலோ ஆத்திரப்படகிற நிலையிலோ விட்டு வைப்பது அறிவுடமையாகாது. இந்த அலை வரிசையில் தான் முஸ்லிம்களின் முன்னேற்றம் குறித்து அதிக கவனம் தற்போது எடுக்கபட்டு வருகிறது.
அந்த வகையில முஸ்லிம்கள் முன்னேறுவது, தற்போதைய முஸ்லிம்களின் தேவை என்பதை விட தேசத்தின் தேவை என்று சொன்னால் அது பொருத்தமான ஒரு செய்தியே! அந்தத் தேவையை உணாந்து தான் அரசாங்கம் சச்சார் குழவை நியமித்தது.ஓரு அரசு தனது ஆளுமையின் கீழிருக்கிற மக்களில் ஒரு கனிசமான தொகையினர் பின்னுக்குத்தள்ளிப்பட்டிருப்பதை அறிந்து அவர்களை கைதூக்கிவிடுவதற்காக ஒரு திட்டம் தயாரிப்பது என்பது நாட்டின் மீது அக்கறை கொண்ட நடவடிக்கையின் ஒர் அங்கமே தவிர அது ஒரு சார்பு நடவடிக்கை அல்ல. முஸ்லிம்கள் என்ற வார்ததையை கேட்டதுமே சிலிர்தது எழுந்து கொள்ளும் பா.ஜ.க உள்ளிட்ட இந்துத்துவ பாசிச அமைப்புக்கள் சிறுபான்மையினரை தாஜா செய்வதற்காக இப்படி ஒரு அறிகை சமர்ப்பிக்கப் பட்டிருப்பதாக குறை கூறின.
அது அவர்களது காமாலைக் கண்களின் பலவினமாகும் சச்சாரின் அறிக்கை சுதந்திரத்திற்கு முந்தைய முஸ்லிம் லீக்கின் குரலை ஒத்திருக்கிறது என்று கூறிய பா.ஜ.கவின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி ஜக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை நாட்டை பிளவு படுத்திவிடும் என்று அலறினார். எதெற்கெடுத்தாலும் தேசம் பிளவு பட்டுவிடும் என்று கத்துகிற ஒரு வகை மனோ நோய் பிடித்த இவர்களுக்கு 2001 ம் ஆண்டு இவர்களது அரசு, இந்திய வரலாற்றில் முதன்முறையாக மத அடிப்படையில் மக்கள் தொகை கணக்கொடுப்பை நடத்திய போது, தேசம் பிளவு பட்டுவிடும் என்ற அச்சம் ஏன் வரவில்லை? என்பதும், முஸ்லிம்களின் ஜனத்தொகை பெருக்கம் குறித்து இந்திய மக்களிடத்தில் அவர்கள் செய்து வந்த பொய்ப் பிரச்சாரத்திற்கு சாவு மணிஅடித்து.
முஸ்லிம்களின் ஜனத்தொகை பொருக்கம் குறைந்த வருகிறது என்று சொன்ன சச்சார் அறிக்கை தேசத்தை பிளந்து விடும் என்று அவர்கள் எப்படி எதிர்பார்க்கிறார்கள்? என்பதும் கடவுளுக்கு மட்டுமே அல்ல எல்லோருக்குமே வெளிச்சமாகத் தெரிந்த விசயம் பா.ஜ.க. வின் மதவாத அரசியலின் காட்டுக் கூப்பாடுகளில் இதுவும்; ஒன்று.இவ்வறிக்கை குறித்துன் ஒட்டு மொத்த முஸ்லிம் சமுதாயமும் தனது மனநெகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிற சந்தர்ப்த்தில் போலிப் பெண்ணியம் பேசும் சில முஸ்லிம் பெண்கள் சச்சார் அறிக்கை முஸ்லிம் பெண்களின் நிலை குறித்து எதையும் பேசவில்லை என்று ஆட்சேபனை வெளியிட்டிருந்தார்கள்.இவர்களுக்கு உண்மையான பெண்ணியச் சிநதனை இருந்திருக்குமானால் இந்திய சமுதாயத்தில்பெண்களது நிலையைபற்றி ஒரு அறிக்கை தேவை என்று இவர்கள் அரசைக் கேட்டிருக்க வேண்டும்.
அதை விடுத்து, ஆண் பெண் என்று வித்தியாசம் பார்க்காமல் ஒட்டு மொத்தமாக சமுதாயத்தின் நலனைப்பற்றி பேசிய ஒரு அறிக்கையை
அபத்தமாக விமர்ச்சித்தது இவர்களின் பின்னணி பற்றி மர்மத்தை ஓரளவு புலப்படுத்துவதாக அமைந்தது.சச்சார் அறிக்கை என்பது முஸ்லிம்களின் மீது பரிவு காட்டப்பட வேண்டியதன் அவசியத்தை பேசினாலும் அது முஸ்லிம்களின் மீது உள்ள அக்கறையினால் பேசப்பட்டதல்ல. தேசத்தின் மீதுள்ள அக்கறையினால் பேசப்பட்டதாகும்.இந்த உண்மையை அனைவரும் குறிப்பாக முஸ்லிம்கள் அனைவரும் முதலாவதாக பரிந்து கொள்ள வேண்டும்.ஓரு நாளும் இல்லத திருநாளாய் இந்திய அரசயல் வாதிகளுக்கு இப்படி ஒரு உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும் என்ற நல்ல புத்தி இப்போது எப்படி வந்தது என்று ஆச்சரியப்படுபவர்களுக்கு இந்த உண்மை ஓரளவு தெளிவைத்தரக் கூடும்.
சச்சார் குழு அமைக்கப்பட்டதின் நோக்கத்தை சரிவரப்புரிந்து கொண்ட பிறகு அது திரட்டி தந்துள்ள தகவல்களில் கவனம் செலுத்துவது தான் பொருத்தமானது. ஆப்பொது தான் தேசிய அளவில் சச்சார் அறிக்கையின் முக்கியத்தவமும் புலப்படும். அது மட்டுமல்ல தேசம் அடைந்துள்ள வளர்சியின் பலன் அனைத்து தரப்பினருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று நமது பிரதமர் சமிபகாலமாக பேசி வருவதன் கருத்தும் புரியும இந்தியாவில் 14 கோடி முஸ்லிம்கள் இருப்பதாக குறிப்பிடும் சச்சார் குழு அவர்கள் எவ்வளவு மோசமாக பாதிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதையும் அவர்களது பின்னடைவை சரி செய்வதற்கு எத்தகைய விரிவான தளங்களில் நடவடிக்கை தேவை என்பதையும் மிகுந்த எச்சரிக்கையோடு பதிவு செய்திரக்கிறது.சச்சார் குழு.
தன்னுடைய பரிந்துரைகளை ஏராளமான புள்ளிவிபரங்களின் அடிப்படையில் வழங்கியுள்ளது. அந்தப் புள்ளிவிபரங்கள் முஸ்லிம்களின் மிதப்பான கற்பனைகளை கலைத்தப் போடக் கூடியவை. ஏதார்தத்தின் கோர முகத்தை அச்சம் தருகிற வகையில் அம்பலப்படுத்தக் கூடியவை. இந்திய மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 13.4 சதவிதத்தினராக இருக்கின்றனர். ஆனால் அரசாங்கத்தின் பொறுப்பான பதவிகளில் அவர்கள் உரிய விகிதாச்சாரத்தில் இல்லை. ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் 3 சதவீதத்தினர் தான் முஸ்லிம்கள். சர்வதேச விவகாரங்களை தீர்மாணிக்கிற ஐ.எப்.எஸ் அதிகாரிகளில் 1.8 சதவீததினராகவும், ஐ.பி.எஸ் அதிகாரிகளில் 4 சதவிததத்தினராகவும் மட்டுமே முஸ்லிம்கள் இருக்கிறார்கள். மத்திய ரிசர்வ் காவல் படை, எல்லை பாதுகாவல் படை உள்ளிட்ட இந்திய பாதுகாப்பு நிறுவனங்களில் 3.2 சதவீதத்தினராகவும் மாவட்ட நீதிபதிகளில் 2.7 சதவீதத்தினராகவும் மட்டுமே முஸ்லிம்கள் பதவி வகிக்கிறார்கள். மத்திய மாநில அரசு ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் 4.9 சதவீதத்தினர் மட்டுமே முஸ்லிம்கள்.
இந்த தேசத்தின் இரண்டாவது பெரும் சமுதாயமான முஸ்லிம் சமுதாயம் நாட்டின் நிர்வாக அமைப்பில் பங்குபெறுவதில் இவ்வளவு தூரம் பின்னடைந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு காரணமாக அமைகிற கல்வித் துறையில் முஸ்லிம்களின் பின்னடைவு வேதனையளிக்கிற விதத்தில் சரிவடைந்திரக்கிறது என்று சச்சார் குழ கூறுகிறது. முஸ்லிம்களில் 4 சதவீதத்தினர் தான் பள்ளிப்படிப்பை தாண்டி கல்லூரிக்கு செல்கிறார்கள். 7.2 சதவீதத்தினர் தான் உயர்நிலை பள்ளிப்படிப்பை முடித்திருக்கிறார்கள்; என்றும் பட்டமேற்படிப்பு படித்தவர்கள் 1.2 சதவிதத்தினர் தான் என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.ஓரு அதிர்ச்சியளிக்கிற செய்தியாக, தலித்துகளைவிட முஸ்லிம்கள் பின்தங்கியிருக்கிறார்கள் என்ற உண்மையை புள்ளி விபரங்களோடு சச்சார் அம்பலப்படுத்துகின்றார்.
இந்தநாட்டை பன்னூறு ஆண்டுகள் கட்டியாண்ட சமுதாயம் என்ற பழம் பெறுமையினால் அல்ல. உலக சமுதாயத்திற்கு முன்னுதாரணமாக திகழ்ந்து உலகத்தின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்ப கடமைப்பட்ட ஒர சமுதாயம், அதற்கான முன்னுதாரணங்களையும் பரந்த அனுபவத்தையும் கொண்ட ஒரு சமுதாயம் என்ற வகையில் முஸ்லிம் சமுதாயத்தின் இன்றைய நிலை குறித்து சச்சார் குறிப்பிடும் தகவல்கள் மிகுந்த வேதனை அளிப்பவை. இந்தியாவில் வாழ்கிற முஸ்லிம்களில் 94.8 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக் கீழே இருக்கிறார்கள். இந்திய நகரங்களில் இருக்கிற முஸ்லிம்களில் 28.3 சதவீதம் பேர் மிக மோசமான வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்வதாக குறிப்பிடுகிற சச்சார் குழு இந்தியாவில் இந்நிலையில் வாழ்பவர்களின் மொத்த சதவீதமே 22.8 தான் என்று குறிப்பிடுகிறது. நாடு முழுவதிலுமுள்ள சிறு நகரங்களில் தலித்தகள் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களின் மாதவருவாயை விட முஸ்லிம்களின் மாத வருவாய் குறைவாக இருக்கிறது.நீதித்துறையில் தலித்துகளின் பங்கு 20 சதவீதமாக இருக்கிற போது முஸ்லிம்கள் பங்கு 7.8 சதவீதமாக இருக்கிறது.தலித்துகளில் 23 சதவீதத்தினருக்கு குழாய் குடிநீர் கிடைக்கும் போது முஸ்லிமகளில் 19 சதவிதத்தினருக்கு மட்டுமே அது கிடைக்கிறது.தலித்துகளில் 32 சதவீதம் பேருக்கு ரேஷன் கார்டு இருக்கிறதென்றால் முஸ்லிம்களில் 22 சதவிததினரே ரேஷன் கார்டு வைத்திருக்கின்றனர்.பொதுத்துறை (7.2) சுகாரத்துறை (4.4) ரயிலவே துறை (4.5) போன்ற பல்வேறு துறைகளில் தலித்களைவிட முஸ்லிம்களின் பங்கு குறைவாகவே இருக்கிறது.முஸ்லிம் விவசாயிகளில் 2.1 சதவீதத்தினர்தான் சொந்தமாக டிராக்டர் வைத்திருக்கிறார்கள். ஒரு சதவீதத்தினர் தான் நிலத்துக்கு நீர்பாய்ச்ச பம்ப்செட் வைத்திரக்கிறார்கள். எல்லா வற்றுக்கும் மேலாக சச்சார் குறிப்பிடுகிற முக்கியமான விசயம் முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப அரசியல் அதிகாரத்தில் பிரதிநிதித்துவம் வழங்கப்பட வில்லை என்பதாகும்.
தற்போதைய மக்கள தொகையில் 543 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் முஸ்லிம்களின் மக்கள் தொகைக்கு சச்சார் வழங்கும் எண்ணிக்பை;படி பார்த்தாலும் சுமார் 75 பேர் முஸ்லிம் எம்.பி க்கள் இருக்க வேண்டும். ஆனால் இப்பொதைய மக்களவையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 33 மட்டுமே! மின்சாரம் இல்லாத கிராமங்களில் அதிகம் வாழ்பவர்கள் முஸ்லிம்கள். அது போல சேரிகளில் வாழபவர்களிலும் முஸ்லிம்களே அதிகம். இவற்றில் தலித்துகளைவிட முஸ்லிம்கள் மோசமாக இருக்கிறார்கள் என்பது போன்ற தகவல்கள் பெருமைமிகு சமுதயாத்தின் அந்தஸ்த்திற்கும் அடையாளத்திற்கும் சிறிதும் பொருத்தமானதல்ல. அதேபோல வேகமாக வளர்ந்து வருகிற ஒரு நாட்டில் அதனுடைய மக்களில் கணிசமானோர் இத்தகைய பரிதாப சூழ்நிலையில் பின்னடைந்திரப்பது அந்நாட்டின் முன்னேற்றத்திற்கும் பொருத்தமானதல்ல. ஒரு நாடு வளர்ந்த நாடென்றால் அதன் அத்தனை அங்கங்களும் வளர்ந்திருக்க வேண்டும். உருவம் வளர்ந்து கால் வளராவிட்டால் அது ஊனம் என்று ஆகிவிடாதா?
ஆதனால் தான் சச்சார் அறிக்கை நாடடிலுள்ள முஸ்லிமகளின் நிலையை சுட்டிக்காட்டி அவர்களை முன்னேற்றிவிடுவதற்கு தேவையான பல நடவடிக்கைககைளை அரசாங்கத்திற்கு பரிந்துரைத்துள்ளது. அரசாங்கமும் அந்த அறிக்கையின் மீது நடவடி;ககைளை தொடங்கப் போவதாக கூறிவருகிறது. அதே நேரத்தில் சச்சார் அறிக்கையின் ஒவ்வொரு விசயத்தையும் அலசி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை என்று எண்ணிக் கொண்டு முஸ்லிம் சமுதாயம் வாளாவிருந்துவிடக் கூடாது. அல்லது எதிர் நடவடிக்கையாக எங்கள் உயிரைக் கொடுத்தேனும் சச்சார் அறிக்கையை செயல்படுத்தப் போராடுவோம் என்று அதீத உணர்ச்சி வசப்பட்டு கோஷம் பொட்டுக் கொண்டிரக்கவும் கூடாது.
சச்சார் அறிக்கை அரசாங்கத்திற்காக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்காக வழங்கப்;பட்டிருக்கிறது என்பது ஒரு முதன்மையான உண்மை என்றாலும் அதை விட முக்கியமாக இந்த அறிககையை முஸ்லிம் சமதாயம் தன்னுடைய சுய வளர்ச்சிக்கான வரைபடமாகவும் வழிகாட்டுதலாகவும் பயன்படுத்திக் கொள்ள கடமைப் பட்டிருக்கிறது. சச்சார் அறிக்கை குறித்து மிக அழுத்தமாக உணரப்பட வேண்டிய பேருமை இது. முஸ்லிம்கள் வசிக்கிற ஒவ்வொரு ஊர் அளவிலும் மஹல்லாக்கள் அளவிலும் சச்சார் அறிக்கை விவாதிக்கப்பட வேண்டும். அரசியல் அதிகாரம் பெறுதல் நவின கல்வி பெறுதல் பொருளாதார வளத்தை பெருக்கிக் கொள்வதற்காக போதுமான உதவிகளைப் பெறுதல் உள்ளிட்ட அறிக்கை குறிப்பிடுகிற அனைத்து அம்சங்களும் அலசப்பட வேண்டும். அப்படி அலசுகிற போது ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது நகரத்தின், ஊரின், அல்லது கிராமததின் நிலையை அந்த அறிக்கையோடு ஒப்பிட்டப் பார்க்க வேண்டும்.
இதில் மறுக்க முடியாத ஓரு உண்மை என்னவென்றால், ஒவ்வெரு பகுதியை சேர்ந்தவர்களும் இந்த அறிக்கையின் படி தங்களது பகுதியின் நிலவரத்தை மதிபட்டுப்பாக்கையில் முஸ்லிம் சமுதாயம் முன்னேறாமல் போனதற்கு, நமது தரப்பில் ஏற்பட்ட தவறு என்ன என்பதை உணர்நது கொள்ள ஒரு நல்ல வாய்ப்புக் கிடைக்கும். அது மட்டுமல்ல பிறறை எதிர்பார்த்துக் கொண்டர்க்காமல் நமது முன்னேற்றத்தை நாமே திர்மானிக்கிற சக்தி எந்த அளவு நம்மிடம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளவும் அது உதவும். சச்சார் அறிக்கை குறித்து கருத்து வெளியிடுகிற கல்வியாளர்கள் அறிஞர்கள் பலரும் முஸ்லிம் சமுதாயம் இந்த அறிக்கைவைத்து அரகளிடம் கையேந்திக கொண்டிருப்பதை விட இந்த அறிக்யை தங்களது எதிர்கால வளர்ச்சியை திட்மிடுவதற்கு ஒரு திட்ட வரையறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குறிப்படுவதை சமுதாயம் மிக அழுத்தமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
சச்சார் குழவின் உறுப்பினர் செயலராக இருந்தவரும் பிரபல பொருளாதார நிபுணருமுhன டாக்டர் அபு சாலிஹ் ஷரீப் அமெரிக்க வாழ் இந்திய முஸ்லிம்களிடையே உரையாற்றும் போது முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அமைப்புக்களுக்கும் சில ஆலொசனைகளை வழங்கியுள்ளார். சாதகமான பரிகாரங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்த்து காத்திருக்காதீர்கள். அது பற்றி கேட்டுக் கொண்டிருக்கவும் வேண்டாம் என்று கூறியுள்ள அவர் முஸ்லிம்கள் தங்களது உரிமைகளையும் தேவைகளயும் முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறியள்ளது மிகுந்த பொறுப்புணர்வோடு கவனிக்க வேண்டிய செய்தியாகும்.அரசாங்கத்திடம் பொத்தம் பொதுவாக சொல்லப்படுகிற பரிந்துரைகள் பயணளிக்காது. எதையும் திட்டமிட்டு வரையறுத்து, இன்றைய தகவல் தொழில் நுட்ப உலகத்தின் பாஷையில் சொல்வதனால் புராஜக்ட் ஒர்க் செய்து முன்வைக்கப்படுகிற திட்டம் தான் செயல்பாட்டிற்கு வருவத சாத்தியமாகும் என்பதை விவரமறிந்த அனைவரும் ஒத்துக்கொள்வார்கள்.
அது மட்டுல்ல ஒரு குறிப்பிட்ட திட்டவட்டமான செயல்திட்டத்தை வகுத்துக் கொண்டிருந்தால் தான் சமுதாயம் தன்னுடைய கோரிக்கை கேட்கும் போது அது கூர்மையுடையதாக அமையும். இந்த வகையில் முஸ்லிம்களின் ஒவ்வொரு மஹல்லாவும் தத்தமது பகுதிகளுக்கான புராஜெக்ட் ஒர்க்கை சச்சார் அறிக்கை அடிப்படையில் தயார் செய்ய வேண்டிய தேவை இருக்கிறது. உதாரணத்திற்கு ஒன்றை சுட்டிக்காட்ட முடியும்.சச்சார் அறிக்கை அரசியல் அதிகாரத்தில் முஸ்லிம்கள் எவ்வளவு தூரம் விலக்கி வைக்கபட்டிருக்கிறார்கள் என்பதை பட்டியலிடுகிறது. நாட்டின் மொத்த ஜன்த்தொகையில் 15 சதவீதம் இருக்கிற முஸ்லிம்களுக்கு பஞ்சாயத்துகளிலிருந்து பாராளுமன்றம் வரை உரிய பங்களிப்பு வழங்க்க படவில்லை என்கிறது. 543 உறுப்பினர்களை கொண்ட மக்களவையில் 33 பேர் மட்டுமே முஸ்லிம்கள் என்பதை குறிப்பிடு சச்சார் இது அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசியல் அதிகாரத்தில் பாதியை விட குறைவானதே என்று குறிப்பிடுகிறது. அரசியல் அதிகாரத்தில் முஸ்லிம்களுக்கு உரிய பங்களப்பு வழங்கப்படுவது தான் முஸ்லிம்களை கைதூக்கி விடுவதில் மிக முக்கியமான அம்சம் என்று குறிப்பிடுகிறது.
சச்சார் அதற்கான வழிமுறைகளைகளையும் கூறுகிறார். அதுதான் மிகவும் துணிச்சலானது மிகவும் கவனிக்கத்தகுந்தது. முஸ்லிம்கள் அரசியல் அதிகாரத்தை பெறுவதற்கு வசதியாக முஸ்லிம்கள் நிறைந்துள்ள தொகுதிகளை மறு சீரமைப்புச் செய்யும் போது முஸ்லிம்கள் வெற்றி பெறுவதற்கு ஏற்ப தொகுதிகள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார். முஸலிம் சமதாயத்தை யாராவது வுஞ்சிக்கப்பட்ட சமுயதாயம் என்று கூறினால் அஸ்தஃபிருல்லாஹ் அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் அல்லாஹ் நல்லபடிதான் நம்மை வைத்திருக்கிறான் என்று சொல்லிக் கொண்டிருக்கிற யாராவது சச்சார் குறிப்பிடகிற இந்த அம்சத்தை யோசித்தப் பார்த்தால் வஞ்சிக்கப்பட்ட சமுதாயம் என்ற வார்த்தைக்கான மொத்தப் பொருளும் முஸ்லிம் சமுதாயத்திற்கு பொருந்திப் போவதை உணர்வார்கள். சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி மன்றங்களுக்கான தொகுதிகள் அமைக்கப்படுகையில் மிக கவனமாக முஸ்லிம்களின் தொகுதிகள் சிதைக்கப் பட்டிருப்பதை எங்கும் பார்க்க முடியும். . முஸ்லிம்களோ இது குறித்து எந்த விழிப்புணர்வும் இதுவரை பெறவில்லை. முஸ்லிம்களுக்காக நாடுதழுவிய போராட்டம் நடத்துகிற அமைப்பக்களுக்கும் இது குறித்து யோசிக்க நேரம் இருப்பதில்லை.
இது குறித்து யொசித்தும் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே!இந்தப்பிரசசினை எங்களது நகரத்தில் மட்டுமல்ல. முஸ்லிம்கள் கனிசமாக வாழ்கிற ஒவ்வொரு பகுதியிலும் இருக்கிறது. ஆதிராம்பட்டினமும் முத்துப்பேட்டையும் ஆரம்பத்தில் ஒரே தொகுதியாக இருந்தது.அப்பொது ஒரு மஸ்லிம் சட்டமனற் உறுப்பினர் வெற்றி பெறுவதற்கு வாயப்பிருந்தது. முத்துப் பேட்டையை பிரித்து திருவாரூரோடஇணைத்த போது அந்த வாய்ப்பில் மண்விழுந்தது. ஆதே போல முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கிற கூத்தாநல்லூர் பொதக்குடி அத்திக்கடை பூதமங்கலம் ஆகிய பகுதிகளை ஒரு தொகுதியின் கீழ் இணைத்தால் ஒரு சட்டமன்ற உறுப்பினர் திட்டவட்டமாக தோந்தெடுக்ப்பட வாய்ப்பு ஏற்படும். ஆனால் இந்தப்பகுதிகள் மன்னார்குடி ஒரத்தனாடு, திருவாரூர் ஆகிய பல்வேறு தொகுதிகளுக்குப் பங்கிடப்பட்டதில் குரங்கு அப்பத்தை பங்கிட்ட கதையாகிவிட்டது.
அங்கும் ஒரு முஸ்லிமை தேர்ந்தெடுக்கிற வாய்ப்பை சமுதாயம் இழந்தது.ஐய்யம்பேட்டை பாபநாசம் ராஜகிரி ஆகிய முஸ்லிம்கள் கனிசமாக வாழ்கிற பகுதிகள் ஒரு தொகுதியாக இணைக்கப்பட்டால்; அதே போல நீடூர் மேலக்காவேரி பூந்தோட்டம் இரவாஞ்சேரி ஆகிய பகுதிகளும் ஒரே சட்டமன்றத்தொகுதியாக இணைக்கப்பட்டால் சில முஸ்லிம் உறுப்பினர்கள் சட்டமன்றத்திற்கு யாருடைய தயவும் இன்றி தேர்நதெடுக்கப்பட வாய்ப்பு உண்டு என்று சொல்லப்படுகிறது. முஸ்லிம் சிந்தனையாளர்களால் முன்வைக்கப்படுவதை இந்தக்கருத்துக்களை சமுதாயம் கவனிக்க வேண்டும்.சச்சார் அறிக்கை நமது கண்களை திறக்கச் சொல்கிறது. ஊங்களுடைய அரசியல் அதிகாரம் எங்கெல்லாம் பறிக்கப்பட்டிருக்கிறது என்று கவனியுங்கள். புள்ளிவிபரங்களை தயார் செய்யுங்கள். எங்களுக்தர வேண்டிய இந்த உரிமை நீங்கள் அமைத்த உயர்நிலைககுழ சொன்னபடி தாருங்கள் என்று அரசாங்கத்தை கேட்குகம் படி சச்சார் அறிக்கை நமக்குச் இலைமறைவாகச் சொல்கிறது.
துரதிஷ்டவசமாக சுச்சார் அறிக்கையின் விபரங்களை, அது வெளியடும் இந்திய முஸ்லிம்களின் அவலமான சூழ்நிலையை, முஸ்லிம்களின் முற்றத்திற்கு எடுத்துக் கொண்டு போய் கடை விரித்துக் காட்டி, சமுதாயம் என்ன செய்ய வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்க கடமைப்பட்டவர்கள் அந்த அறிக்கைகைய சரியாகப் புரிந்து சரியான ஒரு நகர்வுக்கு சமதாயத்தை இழுத்து வந்திருக்கிறார்களா என்பது மிக கவலை தோய்ந்த ஒரு கேள்வியாகும். சமதயாத்திற்காக போராட களம் பல கண்ட பராக்கிரமம் கொண்ட அமைப்புக்கள் தங்களது இயக்கங்களின் அடையாளத்தை பாதுகாத்துக் கொள்வதற்காகாக நடத்துகிற பேரணிகளுக்கு தயாராகும் அவசரத்தில் சச்சாரையும் துணைக்கு இழுத்து பக்கத்தில் வைத்துக் கொண்டதை தவிர, மறத்துப் போன சமுதாயத்தை விழிப்படையச் செய்ய வெறெந்த முயற்சியையும் செய்யவில்லை. அவர்களுக்கு ஆர்ப்பட்டமாக செயல்படத் தெரிந்த அளவு ஆக்கரமமாக செயல்படத் தெரியாது.
என்பது அதற்கு காரணமாக இருக்கலாம்.ஜும்ஆ என்ற வளமமான அரங்கின் வீரியத்தை முழுமையாக புரிந்து கொள்ளாத மார்க்க அறிஞர்கள் இதை கொண்டு போய்ச் சேர்ப்பார்கள் என்று எதிர்பார்ப்பது பாவம். இதற்காக அவர்களைச் குற்றம் சொல்வது அதைவிடப் பெரிய பாவம். ஏனெனில் முழங்காலுக்கு கீழே ஜுப்பா அணிந்தால் மட்டும்தான் தான் ஒருவர் பக்தியாளராக இருக்க முடியம் என்று உரத்து நம்பிக்கொண்டிருக்கிற சமூகத்தால் உருவாக்கப்படுகிற ஆலிம்கள், சமுதாயத்தில் தன் அடையாளத்தை பாதுகாத்துக் கொள்வதற்கே போராட வேண்டியிருக்கிறது. இதற்கெல்லாம் யோசிப்பதுற்கு கூட அவர்களுக்கு தெரியாது என்பது தான் எதார்த்தம். அவர்களை இடித்துரைப்பதால் எந்தப் பலனும் இல்லை. அது அன்னாந்து உமிழ்வது போல அபத்தமானது.( ஒரு நல்ல செய்தியாக கடந்த 24 ம்தேதி நீடூரில் கூடிய தமிழ்மாநில ஜமாத்துல் உலமாவின் செயற்குழு சச்சார் அறிக்கை குறித்த விழிப்புணர்வுக் கூட்டங்களை நாடுமுழுவதும் நடத்த திட்மிட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
அது ஆரோக்கியய்மான சிந்தனையையும் ஆக்ககரமான செயல்பாட்டையும் சமுதாயத்தில் தோற்று விக்க வேண்டும்) இந்நிலையில் உதய சூரியனின் கதிர்கள் வந்து தட்டி எழுப்பும் என்றோ கை தூக்கி விடுவதற்கு கைகள் வரும் என்றோ முஸ்லிம் சமுதயம் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் அது இன்னும் சில நூற்றாண்டுகளுக்கான சரிவிலே சமுதாயத்தை தள்ளிவிடக்கூடும். தன்னுனர்வு பெற்று தனக்கான பாதையை தானே அமைத்துக் கொள்ளத் தயராகாத ஒரு சமுதாயத்தை கந்தன் வந்து காப்பாற்றுவான் என்று எதிர்பார்த்தால் அது கானல்நீரில் கப்பலோட்டுவதற்கு சமமானது. அது இஸ்லாமின் எண்ணவோட்டத்திற்கு எதிரானதும் கூட.தனது வெற்றிப்பயணத்திற்கான கட்டுச்சாதத்தை தன்னிடமிருப்பதிலிருந்தே தயார் செய்து கொள்ள முஸ்லிம் சமதாயம் முன் முயறச்சி எடுக்க வேண்டும்.
அதை விட்டு நான் கூட்டம் கூட்டி விட்டேன் பிரதமரை பார்த்து விட்டேன் கேபினட் நாற்காலியில் உக்காந்துவிட்டேன் வெற்றிகிடைத்துவிட்டது என்று பெறுமை பேசக்கூடாது. அது பாராளும்மன்றத்தில் ஒலிக்கவேண்டும் நாம் அதற்க்கு பாராளும்மன்றத்தில் இருக்கும் உருப்பினர்களை அனுகிஅதை ஒலிக்க செய்யவேண்டும் நாம் சந்த்துகளில் உக்காந்து சிந்து பாடுவதால்ஓன்றும் நடக்காது பெண்கள் இடஒதுக்கீடு பார்தீற்கள் அல்லவா என்ன நடந்தது என்று என்னி பாருங்கள் இனியாவது நமது இஸ்லாமிய சகோதர்களோடு விறுப்பு வெறுப்பு மறந்து நமது சமுதாயம் ஒற்றுமையாக வாழதலைவர்கள் நினைக்கவேண்டும் இல்லையேல் அவர்களை நாம் தூக்கி எறியவேண்டும். அதை விடுத்து சச்சார் என்று உச்சாடணம் மட்டும் செய்து கொண்டிருந்தால் அது முல்லா புத்தகத்தை பிடித்திருந்தது போல வேடிக்கையாகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக