அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

சனி, 17 ஜூலை, 2010

ரேஷன் கடையில் ஸ்டாக் இருக்கா? எஸ்.எம்.எஸ் அனுப்பினால் தெரியும்.

ரேஷன் கடையில் அரிசி, பருப்பு வைத்து கொண்டே ‘ஸ்டாக் இல்லை’ என்று இனிமேல் சொல்ல முடியாது. எஸ்எம்எஸ் மூலமே நீங்கள் எவ்வளவு ஸ்டாக் உள்ளது என கண்டுபிடித்து விடலாம். ரேஷன் கடை செயல்பாடுகள் ஒளிவுமறைவின்றி இருப்பதை உறுதி செய்வதற்கு, இந்த வசதி ஓராண்டுக்கு முன்பே அறிமுகப்படுத்தப்பட்டது.


ஆனால், பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. ரேஷன் கடையில் என்னென்ன பொருள் எவ்வளவு இருப்பு உள்ளது என்று அறிய நீங்கள் செய்ய வேண்டியது ஒரே ஒரு எஸ்எம்எஸ் அனுப்புவதுதான்.
முதலில் PDS என டைப் செய்து இடைவெளி விட்டு, மாவட்ட குறியீட்டு எண்ணை டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் பகுதி ரேஷன் கடை எண்ணை டைப் செய்து 9789006492 மற்றும் 9789005450 என்ற நம்பருக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் உடனடியாக இருப்பு விவரங்கள் எஸ்எம்எஸ் மூலம் வந்து விடும்.
மாவட்ட குறியீட்டு எண், ரேஷன் கடை எண் ஆகியவை ரேஷன் கார்டிலேயே இருக்கிறது. கார்டில் மேல்பகுதியில் 11 இலக்கம் கொண்ட எண் உள்ளது. இதில் ஆங்கில எழுத்துக்கு முன்புள்ள 2 எண்கள் மாவட்ட குறியீட்டு எண். கடை எண் ரேஷன் கார்டின் கீழ்பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக