அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 19 ஜூலை, 2010

தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.- இந்திய கம்யூ.மோதல்: கலவரத்தை அடக்க சென்ற இன்ஸ்பெக்டர் கை முறிப்பு- தடியடியில் 10 பேர் படுகாயம்



முத்துப்பேட்டை,ஜூலை. 19-

திருவாரூர் மாவட்ட ஊராட்சி 17-வது வார்டு உறுப்பினராக இருந்த பக்கிரிசாமி இறந்ததை தொடர்ந்து அங்கு இடைத்தேர்தல் 22-ந்தேதி நடக்கிறது. இதில் தி.மு.க.சார்பில் ஒன்றிய துணை செயலாளர் மாங்குடி கண்ணுனும், அ.தி.மு.க கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகையனும் போட்டியிடுகிறார்கள்.


இடைதேர்தலையொட்டி இருகட்சியை சேர்ந்தவர் களும் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.நேற்றுமாலை கோட்டூர் ஒன்றிய தி.மு.க செயலாளர் தேவதாஸ் தலைமையில் ஓவரூர் பகுதியில் பிரசாரம் செய்தனர்.

அப்போது அவர்கள் அங்குள்ள மாரியம்மன் கோவில் அருகில் அன்னதானம் வழங்கினர். அப்போது அங்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் வந்தனர். இங்கு அன்னதானம் வழங்ககூடாது என அவர்கள் கூறினர். இதை தொடர்ந்து தி.மு.க.- இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.


பிறகு அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. அவர்கள் அடி- தடியில் ஈடுபட்டனர். இந்த மோதலில் தி.மு.க செயலாளர் தேவதாசின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

இந்த மோதல் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு- பதட்டம் ஏற்பட்டது. இதுப்பற்றிய தகவல் இடையூர் போலீஸ் நிலையத்துக்கு தெரியவந்தது. உடனே ஓவரூர் பகுதிக்கு இன்ஸ்பெக்டர் சமரசம் தலைமையில் போலீசார் விரைந்து சென்றனர்.


அவர்கள் மோதலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்தனர். ஆனால் அவர்கள்தொடர்ந்து மோதலில் ஈடுபட்டனர்.இதனை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தினர்.அப்போது இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கட்டையால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சமரசத்தின் கையில் தாக்கினர்.இதில் அவரது கை முறிந்தது. அவர் திருத்துறைப்பூண்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


போலீசார் நடத்திய தடியடியில் களப்பார் செல்வராஜ், நாகராஜ், மகாலிங்கம்,செல்வகுமார், ஜீவா உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் போலீஸ் வாகனத்தை சிறைப்பிடித்தனர்.

இதில் உலக நாதன் எம்.எல்.ஏ, முன்னாள்எம்.எல்.ஏ பழனிசாமி, மாவட்ட அ.தி.மு.க செயலாளர் காமராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீஸ் சூப்பிரண்டு பிரவின்குமார் அபினபு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் துரைராஜ், முத்துப்பேட்டை ஏ.எஸ்.பி. சரவணன் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்ச வார்த்தை நடத்தினர். அதன்பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.





மோதலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சமரசம் கையை முறித்த சம்பவம் தொடர்பாக ஓவரூர் கம்யூரவி, தே.மு.தி.க வை சேர்ந்த காமராஜ், முத்துபேட்டை சாமிநாதன், சிவபிரகாசம், முத்தரசன், முத்து, ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.தி.மு.க செயலாளர் காரை உடைத்ததாக இ.கம்யூ துணை செயலாளர் ராமநாதன், உள்பட 15 பேர்மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக