மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானி. பெங்களூரில், 2008ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில், மதானியை முக்கிய குற்றவாளியாக கர்நாடக போலீசார் சேர்த்தனர்.

இதையடுத்து, அவரை கைது செய்வதற்காக கர்நாடக போலீஸ் குழு, கடந்த சில நாட்களுக்கு முன் கேரளா வந்தது. இவர்கள், கொல்லத்தில் தங்கியிருந்தனர்.
இந்நிலையில் சரணடைவதற்காக வாகனத்தில் மதானி புறப்பட தயாரான போது, கேரள போலீசாரின் உதவியுடன், அதை தடுத்து நிறுத்திய கர்நாடக போலீசார், மதானியை நேற்று கைது செய்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த அவரது ஆதரவாளர்கள், போலீசாருக்கு எதிராக கோஷமிட்டனர். மதானி கைது விவகாரத்தால் கேரளாவில் பதட்டம் நிலவுகிறது.
மதானி கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள மாநிலம் கண்ணூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களில் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் முழுஅடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அஙகு அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக