
இந்தியர்கள் தொழில், வர்த்தகம், வேலை என பலவற்றிற்காகவும் அரபு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு அரபு நாடுகளில் மட்டும், 36 லட்சத்து 85 ஆயிரத்து 58 இந்தியர்கள் வசிக்கின்றனர்.
இவர்களில் பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்டு, மூவாயிரத்து 95 இந்தியர்கள், அரபு நாடுகளில் உள்ள பல சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகளவு ஐக்கிய அரபு குடியரசு (யு.ஏ.இ.,)நாட்டில், ஆயிரத்து 361 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவில், ஆயிரத்து 226 பேரும், குவைத்தில் 263 பேரும், ஓமனில் 126, பக்ரைனில் 91, கத்தார் 28 என இந்தியர்கள் சிறையில் அடைப்பட்டுள்ளனர் என வயலார் ரவி தெரிவித்தார்.
-- நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக