அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

காஷ்மீர் பிரச்சனை: பாஜக வேண்டுகோள்

காஷ்மீர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள் பழைய விஷயங்களை எல்லாம் மறந்துவிட்டு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நடைபோடுங்கள் என்று பாஜக தலைவர் நிதின் கட்கரி பேசினார்.


காஷ்மீரில் உள்ள பல்கலைக்கழக மாணவர்களுடன் பாஜக தலைவர்கள் கலந்துரையாடல் நடத்தினர். அப்போது பேசிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ்,
ஜனநாயக அரசியல் அமைப்பில் பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும். கல் வீசித் தாக்குவது வன்முறை மேலும் மேலும் அதிகரிக்க வழிவகுக்குமே தவிர பிரச்னைக்கு தீர்வாகாது.
பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி குண்டுகளாலோ அல்லது போராட்டக்காரர்களின் கற்களாலோ எந்தப் பயனும் ஏற்பட போவதில்லை. போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கினால் பதிலுக்கு பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்துகின்றனர் என்றார்.
பாஜக தலைவர் நிதின் கட்கரி கலந்துரையாடும்போது, காஷ்மீர் தனி நாடு கோரிக்கையை எமது கட்சி ஏற்காது. இந்தியாவின் ஒரு பகுதி என்ற அடிப்படையில் அங்கு இப்போதுள்ள பிரச்னைக்குத் தீர்வு காணலாம்.
காஷ்மீர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள் பழைய விஷயங்களை எல்லாம் மறந்துவிட்டு பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி நடைபோடுங்கள் என்று கூறினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக