அன்சாரியை மிண்டும் கோவை சிறைக்கு மாற்றம்
புதன் கிழமை (இன்று) அதிகாலை 5:30 மணிக்கு சென்னை புழல் சிறையில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் கோவை சிறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசும் சிறைத்துறையும் உத்தரவு பிறப்பிதத்தது.
அன்சாரியை கோவை சிறைக்கு மாற்றம் செய்ய ஒரு மாத காலமாக நமது சமுதாய இயக்க தலைவர்கள் மற்றும் வளைகுட நாடுகளில் இருந்து குரல் கொடுக்கப்பட்டது.
குறிப்பாக த மு மு க மாநில தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவர்கள் தமிழக முதல்வருக்கு அன்சாரியை கோவை சிறைக்கு மாற்றம் செய்ய கடிதம் எழுதினர், மற்றும் தமுமுக மாநில நிர்வாகிகள் தொடர்ந்து உயர்அதிகாரியிடம் பேசி வந்தார்கள். அதுபோல் கோவை மாவட்ட த மு மு க நிர்வாகிகள் கோவை உம்மர் தலைமையில் தமிழக தொழில் துறை அமைச்சர் பழனிசாமியிடம் மற்றும் சிறைத்துறை டி.ஐ.ஐி யிடம் நேரில் மனு கொடுதார்கள்.
அதுபோல் முஸ்லிம் லீக் எம்.பி. அப்துல் ரஹ்மான் அவர்கள் பல முறை சிறைத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களை சந்தித்து உடனே அன்சாரியை கோவை சிறைக்கு மாற்றம் செய்ய வேண்டும் கோரிக்கை வைத்தார். அதுபோல் கோவை மாவட்ட முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் முஹம்மது பஷிர் தலைமையில் பல முறை முஸ்லிம் லீக் அப்துல் ரஹ்மான் எம்.பி. யிடம் தொலை பேசியில் சிறைமாற்றத்திற்க்கு பல முறை முயற்சி செய்தார்கள்.
அதுபோல் இந்தியா தவ்ஹித் ஜமாத் மாநில தலைவர் பாக்கர் அவர்கள் சிறைத்துறை உயர் அதிகாரியிடம் பல முறை பேசினர்.
அதுபோல் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா மாநில துனைத்தலைவர் இஸ்மாயில் மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் கோவை மாவட்ட ஆட்சி தலைவர் யிடம் மனு கொடுத்தார்கள். இத்தனை பேர்கள் முயற்சியில் அல்லாஹ்வின் மாபெரும் உதவினால் அன்சாரியை கோவை சிறைமாற்றம் நடந்தது.
இதற்காக முயற்சி செய்த இஸ்லாமிய இயக்க தலைமைகளுக்கு சிறுபான்மை உதவி அறக்கட்டளை சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறது.
அல்லாஹ் உங்கள் அனைவருக்கும் அருள் புரிவானக ஆமின்.
-- செய்தி கோவை தங்கப்பா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக