
பா.ம.க. தலைமை நிர்வாகக் குழு கூட்டம் இன்று காலை 11 மணிக்கு சென்னையில் நடைபெற்றது. இதில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள். இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் ராமதாஸ்.
அப்போது அவர், ’’தமிழகத்தில் மேலவை கொண்டு வருவதற்கான தீர்மானம் எங்கள் ஆதரவு இல்லாவிட்டால் நிறை வேறி இருக்காது.
ஆதரவு கொடுப்பதற்கு முன்பு ராஜ்யசபா சீட்டையும், மேலவையில் எத்தனை இடங்கள் என்பதையும் பேசி ஒப்பந்தம் போட நிர்பந்தப்படுத்தி இருந்தால் திமுக தரப்பில் ஒப்பந்தம் போட்டிருப்பார்கள்.
நாங்கள் அவர்களை நம்பினோம். நிர்வாக குழு கூடுவது வரை நூற்றுக்கு நூறு உறுதியளித்தார்கள்.நிர்வாக குழு முடிவு வெளிவந்த அந்த நிமிடம் வரை அவர்களை நம்பினோம். ஆனால் நாங்கள் திட்டமிட்டு ஏமாற்றப்பட்டோம்’’ என்று தெரிவித்தார்.
அவர் மேலும், ‘’இப்போது நாங்கள் எந்த கூட்டணியிலும் இல்லை. திமுகவுடன் கூட்டணி பற்றி பேசுவதற்காக ஜி.கே.மணி தலைமையில் ஐவர் குழு முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்தது.
அப்போது மீண்டும் பேசுவோம் என்று கூறி அனுப்பினார். அவர் அழைப்பிற்காக காத்திருக்கிறேன்.
அப்போது மீண்டும் பேசுவோம் என்று கூறி அனுப்பினார். அவர் அழைப்பிற்காக காத்திருக்கிறேன்.
வரும் சட்டசபை தேர்தலில் எங்கள் தலைமையில் கூட்டணி அல்லது 3-வது அணி அமைவது போன்ற எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதிமுக கூட்டணிக்கான கதவு மூடி விட்டதாக சொல்ல முடியாது.
அரசியலில் எந்த கதவையும் மூட முடியாது. அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது. நிரந்தர எதிரியும் கிடையாது.
அரசியலில் எந்த கதவையும் மூட முடியாது. அரசியலில் நிரந்தர நண்பனும் கிடையாது. நிரந்தர எதிரியும் கிடையாது.
தேமுதிகவுக்கும் எங்களுக்கும் எந்தபaகையும் இல்லை. ஆளும் கட்சிகளை நாங்கள் விமர்சித்து இருக்கிறோம்.ஆனால் எதிர்க்கட்சிகளை விமர்சித்தது இல்லை. விஜயகாந்தோடு ஒரே அணியில் இருப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை’’என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக