அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 16 ஆகஸ்ட், 2010

சுதந்திரதின விழாவில் உமர் அப்துல்லா மீது `ஷூ' வீச்சு சப்-இன்ஸ்பெக்டர் ஆத்திரம்


ஸ்ரீநகர், ஆக. 15-நாடு முழுவதும் இன்று 64-வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது.உமர் மீது ஷூ வீச்சு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள பக்சி மைதானத்தில் சுதந்திரதின விழா நடந்தது. முதல்-மந்திரி உமர் அப்துல்லா தேசிய கொடியை ஏற்றி விட்டு மரியாதை செய்து கொண்டு இருந்தார். அப்போது முக்கிய பிரமுகர்கள் அமரும் வரிசையில் இருந்து உமர் அப்துல்லாவை நோக்கி `ஷூ' வீசப்பட்டது. நல்ல வேளையாக அவர் மீது `ஷூ' படவில்லை. அதற்கு முன்பே விழுந்து விட்டது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக பாதுகாப்பு அதிகாரிகள் `ஷூ' வீசிய அந்த நபரை பிடித்தனர். விசாரணையில் அவர் பெயர் அப்துல் அகத்ஜான் என்பதும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் என்பது தெரிய வந்தது. பாதுகாப்பு அதிகாரிகள் உடனே அவரை கைது செய்தனர். அவர் கையில் கறுப்பு பட்டை அணிந்து இருந்தார். பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கைது செய்த போது `தங்களுக்கு சுதந்திரம் வேண்டும்' என்று கோஷமிட்டார். இது குறித்து உமர் அப்துல்லா கூறும் போது போராட்டத்தில் ஈடுபடுவதற்கு இது சரியான நேரமில்லை. கற்களுக்கு பதிலாக ஷூவை வீசியதில் தவறு இல்லை என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக