அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

சனி, 21 ஆகஸ்ட், 2010

இன்ஷா அல்லாஹ் உங்களின் உதவியை நாடி இந்த சிறுவன் ..!!!

அஸ்ஸலாமு அலைக்கும்.
இணைப்பிலுள்ள போட்டோவில் தரையில் அமர்ந்திருக்கும் பாலகனுக்கு பிறப்பிலிருந்தே மலத்துவாரமும் சிறுநீர் துவாரமும் இல்லாமல் பிறந்து, தற்போது மிகுந்த சிரமத்திற்கு இடையில் சுமார் 4-5 இலட்ச ரூபாய் செலவு செய்து விலாவின் பக்கவாட்டில் செயற்கை துளையிட்டு உயிர் வாழ்ந்து வருகிறான் (அல்ஹம்துலில்லாஹ்)

மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி இந்த முறையில் 8-12 மாதங்கள் பின்பற்றலாம். தமிழக அரசின் உயிர் காக்கும் காப்பீட்டுத் திட்டம் பிறவி நோய்களுக்குக் கிடையாது என்பதால் அதைப்பயன்படுத்த முடியவில்லை. எனினும் சிலரின் பரிந்துரையின்பேரில் மருத்துவச் செலவுகளை 3-4 இலட்சத்திற்குள் மருத்துவனை குறைத்துக் கொண்டு சிகிச்சையளிக்க முன்வந்துள்ளது.

இப்பாலகனின் தந்தை துபாயில் மிகக்குறைவான சம்பளத்தில் கடைமட்ட வேலையில் இருப்பதால் சிகிச்சைக்கு தேவையான தொகையை திரட்ட முடியாமல் மிகவும் கஷ்டப் படுகிறார் என்ற தகவல் நண்பர் மூலம் கிடைத்தது.

அன்பிற்குறிய சகோதரர்களே, நம்மிடையே பிறந்து விட்ட இப்பாலகனின் கஷ்டத்தை நம்மில் சிலர் முன்வந்தால் வெகுவாகக் குறைக்கலாம்.எழுபது மடங்கு நற்கூலி கிடைக்கும் இந்த ரமலானில் உங்கள் ஜகாத், ஸதகாவை இப்பாலகனின் சிகிச்சைக்கும் கொஞ்சம் கொடுத்து உதவினால் இன்ஷா அல்லாஹ் பேருதவியாக இருக்கும்.

இம்மடல் கிடைக்கப்பெற்றவர்கள் தங்கள் நன்கொடையை கீழ்காணும் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்கலாம்.

BANK : ICICI - ராமநாதபுரம்
Name : அசனலி
A/C No. : 611601506952 -

சாதாரணமாக,பெரியவர்களுக்கே மலம், சிறுநீர் வெளியேறுவதில் தடங்கல் இருந்தால் ஏற்படும் வேதனை கொடுமையானது. இப்பாலகனின் நிலையை அறிந்து அல்லாஹ்வுக்காக மனமுவந்து தர்மம் செய்யுங்கள். அல்லாஹ் உங்கள் செல்வத்தை பெருக்கச் செய்வான் இன்ஷா அல்லாஹ்.

இத்துடன் பாலகனின் (தரையில் உட்கார்ந்து இருப்பவன்) புகைப்படம் மற்றும் மருத்து ரிப்போர்ட் நகலை இணைத்துள்ளேன். வாய்ப்பு உள்ளவர்கள் நேரடியாகவோ அல்லது தங்கள் நண்பர்கள், சக பணியாளர்கள் மூலமோ தேவையான நிதி திரட்டி மேற்கண்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைக்கலாம். இச்சிறுவனின் தந்தையின் தொலைபேசி எண்ணில் (055 463 8930) தொடர்பு கொண்டு மேலதிக தகவலைப் பெற்றுக்கொள்ளலாம்.

வஸ்ஸலாம்.

MEDICAL REPORTS :





தயவு செய்து படித்துவிட்டு சும்மா சென்றுவிடாதீர்கள் உங்களால் முடிந்தளவு உதவிபுரியிங்கள் .உதவி புரியும் சகோதரர்களுக்கு எங்களது நன்றியும், துவாவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக