ம ம க வின் அரசியல் முடிவுக்கு அமோக வரவேற்பு
அரபு வளைகுடா நாடுகளில் இந்தியர்களுக்கு மத்தியில் செல்வாக்கு மிக்க அமைப்பாக தமுமுக செயல்பட்டு வருகிறது , அங்கும் ரத்த தானம் , மருத்துவ உதவி , வேலை வாய்ப்பு உதவி , இஸ்லாமிய பிரச்சாரம் ,அழைப்பு பணி , சமுதாய விழிப்புணர்வு கருத்தரங்குகள் என வாரந்தோறும் நடைபெறும் நிகழ்சிகளால் மக்கள் ஆதரவு பெருகிக்கொண்டே செல்கிறது , அல்ஹம்துல்லில்லாஹ்....
அவர்கள் மாநாடு, கருத்தரங்கம், உள்ளரங்கம், தொழிலாளர் முகாம்கள் , விடுதி அறைகளில் தொடர்ந்து உரையாற்றி , தொடர்ந்து நடைபெறும் கேள்வி - பதில் அமர்வுகளில் அனல் பறக்கும் கேள்விகளுக்கு , பொறி பறக்கும் பதில்களை பதிவு செய்து மக்களை வசப்படுத்தி உள்ளனர். தொடர்ந்து அமீரக நிர்வாகிகளும் மண்டல நிர்வாகிகளும் , கிளை நிர்வாகிகளும் முழு வீச்சில் சுழன்று வருகிறார்கள் .
தொழிலதிபர்கள் , அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் பிரமுகர்களுடன் நடைபெறும் தனி சந்திப்புகள் கேள்வி- பதில்களுடன் மிகுந்த உற்சாகமாக நடைபெற்றன.
ஷார்ஜா, அபுதாபி , ரசல் கைமா , அலைன் மண்டலங்களில் நடைபெற்ற தமுமுக நிகழ்சிகளில் மக்கள் வெள்ளம் திரண்டது நிர்வாகிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது . அமீரகம் முழுக்க அணைத்து மண்டலங்களிலும் நடைபெற்ற சிறியதும் பெரியதுமான நிகழ்சிகளில் மனித நேய மக்கள் கட்சியின் அரசியல் நிலைப்பாட்டுக்கும் ADMK கூட்டணிக்கும் சமுதாய மக்கள் அளித்த ஆதரவு தங்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அமீரக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர் .
துபாய் , ஷார்ஜா , அபுதாபி மண்டலங்களில் புதிதாக பல கிளைகள் தொடங்க பட்டிருக்கிறது . அஜ்மான் புஜைரா , உம்முள் குவைன் மண்டலங்களில் புதிய நிர்வாகம் துவக்கப்பட்டு பணிகள் முடுக்கிவிடபட்டுருக்கின்றன .
இப்போது துபாய் மற்றும் ஷார்ஜாவில் இருப்பது போல் எல்லா மண்டலங்களிலும் மர்கஸ் அலுவலகங்கள் தொடங்க பட இருக்கின்றன . தீவிர உறுப்பினர் சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன . மக்கள் உரிமை வார இதழ்களுக்கான சந்தாக்களும் சேகரிக்க பட்டு வருகின்றன .

கடந்த செப் -3 துபையில் நடைபெற்ற அமீரக பொதுக்குழு நிர்வாகிகளுக்கு பெரும் உற்சாகத்தை தந்திருக்கிறது .அமீரக நிர்வாகிகள் , மண்டல நிர்வாகிகள் ,கிளை நிர்வாகிகள் மட்டுமே பங்கேற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 150 நிர்வாகிகள் பங்கேற்றது சாதனை நிகழ்வாகும் . அமீரகத்தில் இதுவரை எந்த அமைப்பும் இவ்வளவு பலமான நிர்வாக கட்டமைப்போடு செயல் பட்டதில்லை என பல்வேறு ஊர்களை சார்ந்த ஜமாஅத் நண்பர்கள் தெரிவிக்கின்றனர் .மொத்தத்தில் அமீரகத்தில் தமிழக மக்களுக்கு மத்தியில் செல்வாக்கு உள்ள அமைப்பு தமுமுக என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது , அமீரகத்தில் தமுமுக அலை வீசுகிறது . அது தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது நிச்சயம். இன்ஷா அல்லாஹ் !!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக