அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 20 ஜூன், 2011



அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....



சமுதாயத்தின் மனநிலையை உணர்ந்தவர்கள்.....



450 ஆண்டுகால வரலாற்று சிறப்புமிக்க இறையில்லமான பாபரி மஸ்ஜித் ஹிந்துத்துவ சக்திகளால் 1992 டிசம்பர் மாதம் 6 ம் தேதி இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. (காங்கிரஸ் கட்சியின் அன்றைய பிரதமர் நரசிம்மராவ் வாய்மூடி மவ்னம் காத்து மறைமுக ஆதரவு அளித்து இருந்தார் என்பதெல்லாம் தனி வரலாறு) அதனை தொடந்து நாடுமுழுவதும் திட்டமிட்டு முஸ்லிம்கள் மட்டும் கறுவருக்கப்பட்டார்கள். மும்பைமா நகரித்திலே பயங்கரவாதி பால்தாக்கரே தலைமையில் 2000க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். சொத்துக்கள் சூறையாடப்பட்டன, காவல்துறையால் பொய் வழக்குகள் அநியாயமாக பதியப்பட்டன. அதன் தொடர்ச்சியை தமிழகமும் சந்திக்க நேரிட்டது ஒருபுறம் ஆட்சி மற்றும் அதிகாரவர்க்கங்கள் அடக்குமுறைகளை திணித்தார்கள், காவல்துறை கருப்பாடுகள் நம் சமுதாய இளைஞர்களை குறிவைத்து பொய்வழக்குகளை போட்டு உள்ளே தள்ளினார்கள்.




கோவையிலே பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டித்தும் அதன் குற்றவாளிகளை தண்டிக்கக்கோரியும் ஜனநாயக ரீதியிலே சுவரொட்டி ஒட்டியதற்கெல்லாம் தடாவை சந்தித்தது அன்றைய முஸ்லிம் சமுதாயம், மேலப்பாளையத்தில் இதே கோரிக்கையை வலியுறுத்தி அமைத்தப்பேரணி நடத்திய ஒரே காரணத்திற்காக முஸ்லிம்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதோடு தடியடியும் நடத்தி அராஜகமுறையை கையாண்டார்கள். இதனையெல்லாம் தட்டிக்கேட்பதற்கு நாதியற்ற சமுதாயமாய் எம் சமூகம் இருந்தது. ஜனநாயகம் பேசக்கூடிய ஜனநாயகவாதிகளும் இருந்தார்கள், மதசார்பின்மை பேசக்கூடிய காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் போன்ற அரசியல் கட்சிகளும் இருந்தன இருந்தும் பயனில்லை. இத்தனைக்கும் மேலாக முஸ்லிம் சமுதாயத்தின் பிரதிநிதயாய் அதிகார அவையிலும் அரசியல் அரங்கிலும் வலம் வந்தவர்கள் வாய்திறக்கவே அஞ்சி நடுநடுங்கி ஓடி ஒழிந்தார்கள். தங்களை திராவிடகட்சிகளுக்கு அடிமைப்படுத்திக்கொண்டார்கள்.




முஸ்லிம்கள் தங்கள் அடையாளத்தோடு வெளியில் வந்தால் நிச்சயம் வீடு திரும்ப முடியாத நிலை. ஒன்று ஹிந்துத்துவ சக்திகளால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டார்கள் அல்லது காவல்துறையால் அநியாயமாக கைதுசெய்யப்பட்டு தீவிரவாத முத்திரை குத்தப்பட்டு சிறைச்சாலைகளை கொடிய சட்டத்தின் கீழ் சந்திக்க நேரிடுவதோடு கடும் தாக்குதலுக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். நாகூர் போன்ற முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் திட்டமிட்டு மதக்கலவரங்களை ஏற்படுத்தி அதன் மூலம் சொத்துக்களும், உயிர்களும் சூறையாடப்பட்டன. இவ்வாறு நம் சமுதாயத்திற்கு எதிராக அவலங்கள் தொடர்கதையாய் அரங்கேறிக்கொண்டிருந்தது. காலமும் மெல்ல நகர்ந்தன...




சமுதாயத்தின் நிலைமையையும், அத்துணை கொடுமைகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக பல்வேறு தளங்களிலே பயணித்த சகோதரர்கள் ஒன்றினைகின்றார்கள். திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் உள்ள சகோ.விஞ்ஞானி அப்துல் ஜலீல் அவர்கள் இல்லத்திலே ஒன்று கூடினார்கள். முஸ்லிம்கள் வெளிவரவே முடியாத அன்றைய காலகட்டத்தில் சமுதாயம் இழந்த உரிமைகளை மீட்க, இருக்கும் உரிமைகளை காக்க (குனங்குடி ஆர்.எம்.ஹனீபா, பி.ஜெய்னுல் ஆபிதீன், எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ், அப்துல் சமது, செய்யது நிசார் அஹமது, செ.ஹைதர் அலி, விஞ்ஞானி அப்துல் ஜலீல், எஸ்.எம்.பாக்கர், ஏ.எஸ்.அலாவுதீன் இன்னும் சில சகோதரர்கள்) அவர்களால் அங்கே புணர்நிர்மாணம் செய்யப்பட்டதுதான் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) இது நிகழ்ந்தது 1995 ஆகஸ்ட் மாதம் 31. கழகம் பச்சிலை குழந்தையாக வீதியல் களம் அமைக்க, முஸ்லிம்களின் உரிமைகளை வலியுறுத்தி குறிப்பாக நாகூர் கலவரத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி வழங்ககோரியும் முதல் பேரணி தர்ணா சென்னை கவர்னர் மாளிகையை நோக்கி என தமுமுக தலைமையகம் அறிவத்த உடனே... நசுக்கப்பட்ட முஸ்லிம்கள் பொங்கி எழுந்தார்கள், ஒடுக்கப்பட்ட முஸ்லிம்கள் ஆர்ப்பரித்தார்கள், தடாவை சந்தித்தே பழக்கப்பட்ட சமுதாயம் தடைகளை தகர்த்தது, அடக்குமுறைகளையே சந்தித்த சமுதாயம் அலைகடலெனப் புறப்பட்டது சென்னையை நோக்கி... முதல் பேரணி தர்ணாவே வெற்றி. (அல்ஹம்துலில்லாஹ்)




இதன் தொடர்ச்சியாய் சமுதாயம் இழந்த உரிமைகளையும், இருக்கும் உரிமைகளை அரசிடம் இருந்து பெறுவதற்கு பிரமாண்ட மாநாடுகள், எண்ணிலடங்கா பொதுக்கூட்டங்கள், பல்வேறு வகையான போராட்டங்கள், உச்சகட்டமாய் சிறைநிரைப்பும் போராட்டங்கள் கூட சமுதாயத்திற்காய் சமுதாய மக்களை ஒன்று திரட்டி உரிமைகளை பிரதிபலித்தது தமுமுக என்னும் சமுதாய பேரியியக்கம். அதோடு நிறுத்திக்கொள்ளாமல் தன்னை பொதுசேவையிலும் அற்பனித்துக்கொண்டது. இரத்த தானமுகாம், இலவச மருத்துவ முகாம், கண் சிகிச்சை முகாம், அவசர ஊர்தி, கத்னா முகாம்கள், பேரிடர் சமய உடனடி பணிகள், என தனது சேவையை தமிழகம் முழுவதும் விரித்து தன்னக்கென ஒரு நற்மதிப்பையும் பெற்றுக்கொண்டதோடு, இரத்த தான சேவையில் தமிழகத்திலேயே முதல் நிலையை பெற்று கவர்னரிடம் விருதையும் பெற்றது தமுமுக. அது மட்டுமல்லாமல் அவசர இரத்த தேவைகளை அறிந்து அவர்களது தேவைகளுக்கு ஏற்ப குருதியை வழங்கி ஒவ்வொரு தமுமுக தொண்டனும் இரத்த கொடையாளராக வளம் வந்துக்கொண்டிருக்கின்றார்கள். இப்படி தொடர்ந்து 16 ஆண்டுகளாக சமுதாயத்திற்காய் விழித்துக்கொண்டிருக்கும் நேரமெல்லாம் மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கும் தமுமுக அரசியல் கட்சிகளாலும், அதிகார வர்க்கங்களாலும் அரசியல் அரங்கில் உண்ணிப்பாக பார்க்கப்படுகின்ற ஒரு மாபெரும் இயக்கம் என்றால் அது மிகையாகாது.




பல்வேறு தளங்களில் போராடிவந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் வெற்றிடத்தை களப்பணிகள் மூலம் உணர்ந்துகொண்ட(து) தமுமுக தலைவர்கள் மண்டிய இருள் கிழிக்க வந்த மெழுகுகளாக அரசியல்களத்தை நோக்கி சீறிப்பாய்ந்தனர் மனிதநேய மக்கள் கட்சியாய். முதல் மாநாட்டிற்கே தாம்பரமும்,சென்னையும் திணறும் வண்ணம் தமிழக முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் திரண்டுவந்தனர். மாநாட்டில் சமுதாய தலைவர்கள் தங்களது தனித்தன்மையை தனக்கே உரிய பாணியில் வீரமுழக்கமிட, சமுதாயமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க அது சில அரசியல் கட்சிகளுக்கு மாபெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. அதன் வெளிப்பாடுதான் பல்வேறு சந்தர்பங்களில் கலைஞர் கருணாநிதியின் திமுக மூலம் உணர முடிந்தது. கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தினார்கள், அடக்குமுறைகளை மீண்டும் திணிக்க முற்பட்டார்கள், நம் சகோதரர்கள் மட்டும் குறிவைத்து வஞசிக்கப்பட்டார்கள். ஆனாலும் தமுமுக, ம.ம.க சகோதரர்கள் சற்றும் தளர்ந்து விடவில்லை. வங்கக் கடலில் எழும் பேரலைகள் போல அதிவேகமாக தனக்கே உரிய தன்னடக்கங்களோடு இரு துருவங்களாக இருவேறு தளத்தில் பயணித்தார்கள். ஆம் அதுதானே தமுமுகவின் கடந்த கால வரலாறும் கூட.




சமுதாயத்தின் மன ஓட்டத்தை புரிந்துக்கொண்ட தமுமுக. 2011 சட்டப்பேரவை தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணிவைத்து ம.ம.கவின் வீரமுழக்கமாம் சொந்த சின்னம் என்ற அடிப்படையில் மூன்று தொகுதிகளில் களம் கண்டு இரண்டிலே (பேரா.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்.MBA.,MPhiL., PhD.,, ஆம்பூர் அஸ்லம் பாஷா, வெற்றி பெற்று முதன் முதலாக சமுதாயத்தின் உண்மை பிரதிநிதிகளாய், தொகுதிமக்களின் உரிமை முழக்கமாய் அதிகார அவையான தமிழக சட்டமன்றத்தில் நுழைந்துள்ளார்கள். தங்களது சீரிய பணியையும், தொடர்ந்து புதிய எழுச்சியை உருவாக்கும் சிந்தணையோடும் பயணிக்கிறார்கள் மண்டிய இருள் கிழிக்க வந்த இரு மெழுகுகள்.




நீதிக்காக வீதிக்கு வராத சமுதாயம் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை...



அநீதியை கண்டு பொங்கி எழாத சமுதாயம் அதிகாரத்தில் அமரப்போவதில்லை...



உரிமை முழக்கங்களை போராட்டகளம் மூலம் முழங்காத சமுதாயம் முடங்கி விடும் என்பதை வரலாறு உணர்த்துகிறது.



இழந்த உரிமைகளை மீட்க இருக்கும் உரிமைகளை காக்க புயலாய் புறப்பட்ட தமுமுக, கத்தியின்றி இரத்தமின்றி போராட்ட யுத்தமே நடத்தியது.



மனிதநேய மக்கள் கட்சியாய் அரசியல் களம் புகுந்து சமுதாயத்தின் தன்மானம் மிக்க தலைவர்களாய் உருவாகி இருக்கிறார்கள் தமுமுக தலைவர்கள். ஆம் சமூகத்தின் மனநிலையை உணர்ந்தவர்களல்லவா, இந்த நிலையை உருவாக்கிய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்......



அரசியலை மாற்றியமைப்போம்.... அதிகாரத்தில் நாமும் பங்கெடுப்போம்....



இந்தப்படை அமைதிப்படை... இஸ்லாம் எங்கள் அடிப்படை....



எல்லாப் புகழும் ஏக இறைவனுக்கே.....



-- முத்துப்பேட்டை முகைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக