அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 5 செப்டம்பர், 2011

வேண்டும் ஹிந்தி.

ஒப்பற்ற இறைவனின் திருப்பெயரால்..



தமிழர்கள் இன்றைய காலச்சூழ்நிலையில் தங்களின் செல்வத்தை பெருக்கிக் கொள்வதற்கும் அல்லது வறுமையான நிலையில் இருந்து விடுபடுவதற்கும் பிழைப்புத்தேடி பல்வேறு நாடுகளுக்கு பயணித்து பல இன்னல்களுக்கு மத்தியில் தங்களது வாழ்க்கையை கழித்து வருகின்றனர். குறிப்பாக வளைகுடா நாடுகளிலும் தமிழர்கள் பல்வேறு நிறுவனங்களில் வேலை புரந்து வருகின்றனர். அவ்வாறு முதன் முதல் வளைகுடா நாடுகளுக்கு வரும் தமிழர்கள் முதலில் படும் அவலம் மொழி தெரியாமல் மற்ற நாட்டினரால் மதிக்கப்படாமல் நடத்தப்படுவதுதான். ஹிந்தி மொழி தெரியாது என்பதற்காக எந்தளவிற்கு இழிவுபடுத்தப்படுவார்கள் என்பது வளைகுடா நாடுகளுக்கு வருகை தந்த ஒவ்வொரு தமிழனுக்கும் தெரியும்.



உதாரணமாக ஒரு சம்பவத்தை கூறுகின்றேன் ஹிந்தி தெரியாத தமிழ் சகோதரர் ஒருவரிடம் படுகேவலமான சில வார்த்தைகளை சொல்லிக்கொடுத்து அதனை அடுத்த சகோதரரிடம் போய் சொல் என்று கூறிருக்கின்றான் ஒருவன். அந்த ஹிந்தி வார்த்தையின் அர்த்தம் புரியாத அந்த தமிழ் சகோதரரும் மற்றவரிடம் கூறியபொழுது இருவருக்கும் மத்தியில் அடிபுடி தகராறே அரங்கேறியுள்ளது. இப்படி ஹிந்தி அறியாத ஒரே காரணத்திற்காக நம் சகோதரர்கள் சந்திக்க நேரிடுகின்றது. இந்த அவலமான நிலையை போக்கிட ஹிந்தியை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தை நம் சந்ததிகளுக்கு ஏற்படுத்த வேண்டும்.




சொந்தங்களே தமிழ் என்பது நமது தாய்மொழி, ஹிந்தி என்பது நம்முடைய வாழ்க்கையில் தேவையான ஒன்றாகிவிட்டது. ஆகவே தமிழகத்தில் ஹிந்தி மொழியை ஒரு பாடமாக்க அணைவரும் ஆட்சியாளர்களை வலியுறுத்துவோம். நம்முடைய அண்டை மாநிலமான கேரளாவில் அடிப்படை கல்வியிலேயே ஹிந்தியை ஒருப்பாடமாகவே வைத்துள்ளார்கள் ஆகவேதான் மலையாளிகள் அணைவரும் ஹிந்தி அறிந்தவர்களாகவே வளைகுடா நாடுகளில் அடிஎடுத்து வைக்கின்றார்கள். இதனை உணர்ந்து நாமும் விழித்துக்கொள்வோமா?



தமிழ் எங்கள் தாய் மொழி

ஹிந்தியும், ஆங்கிலத்தையும் கற்பிப்போம்.


-- முத்துப்பேட்டை முகைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக