அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

திங்கள், 5 செப்டம்பர், 2011

படிப்பினை தந்த ராமளான்...

ஒப்பற்ற இறைவனின் திருப்பெயரால்...



மாதத்தில் சிறந்த மாதம் ரமாளான் மாதம் உண்ண உணவு இருந்தும், பருக பாணம் தண்ணீர் இருந்தும், தன் அருகில் ஹலாலான மனைவி இருந்தும் தனக்கு தானே மனகட்டுபாடுகளை இறைவனுக்கு அஞ்சி பயபக்தியோடு கடைபிடித்து மறுமைக்கான நல் அமல்களை அதிகமதிகம் சேர்த்துக்கொண்ட மாதமாய் ரமாளான் மாதம் திகழ்நதது அல்ஹம்துலில்லாஹ். பசியோடு இருந்து படிப்பினை பெற்ற இந்த ரமளானை முன்மாதிரியாய் எடுத்துக்கொண்டு மீதமுள்ள 11 மாதத்தையும் இறை பக்தியோடு எதிர்கொள்வோம் இறைவன் நாடினால்..



ஒவ்வொரு தினமும் நாம் நோன்பு இருந்து அன்றைய தினம் முழுவதும் இறைவனுக்கு செலுத்த வேண்டிய வணக்கங்களை முறையாக செலுத்தி தனிமையிலும் இறைவனை அஞ்சி உண்மையான மார்கத்தை பின்பற்றி மாலை பொழுதில் நோன்பு திறப்பதற்காக அமரும் பொழுது நம் அருகில் விதவிதமாய் உணவுகள், அதே நேரத்தில் நோன்பு திறப்பதற்கு கூட போதுமான உணவுகள் இல்லாமல் எத்தனை பேர், சோமாலியா போன்ற எழை நாடுகளின் வறுமையையும், பசியையும் நாம் அதிகம் உணரமுடிந்தது இந்த புனிதமிகு ரமாளானில் தான். ஒரே நேரத்தில் ஒருபக்கம் பலவகை உணவுகள், மறுபக்கம் உணவே இல்லாத வறுமை நிலை. அல்லாஹ் நாடியோருக்குத்தான் தனது கஜானாவில் இருந்து வாரி வழங்குவான் என்பதையும் உணரமுடிந்ததோடு அந்த ஏழை மக்களுக்கு நம்மால் ஆன பொருளாதார உதவியை செய்ய தூண்டுதலாய் அமைந்த மாதமும் இந்த ரமாளான் மாதம். இப்படி பல வகையிலும் இறைவனுக்காகவே முழுமையாக தங்களை அர்பணித்து வாழ்ந்த மாதமாய் திகழ்ந்த இந்த ரமாளான் மாதம் நம்மை விட்டு கடந்து ஓரிரு நாட்கள் ஆகிவிட்டாலும் அதே படிப்பினையோடும், பக்குவத்தோடும் மீதமுள்ள மாதங்களை கழித்து ஏக இறைவனின் அருளை தொடர்ந்து பெறுவோம் இன்ஷா அல்லாஹ்..



சமூகத்தில் வறுமை ஒழியட்டும்...


செல்வம் கொழிக்கட்டும்...


ஒற்றுமை ஓங்கட்டும்...


மனிதநேயம் மலரட்டும்...


இறைவனை அஞ்சுவோம்.


மறுமையில் சுவனத்தை பெறுவோம்..


-- முத்துப்பேட்டை முகைதீன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக