அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் அனைவரின் மீதும் உண்டாவதாக...!

சனி, 22 அக்டோபர், 2011



சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…



ஒற்றுமை, ஒற்றுமை என தற்பொழுது பேசிக்கொண்டிருக்கும் சகோதரர்களே, இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளிலும், அல்லது விநாயகர் ஊர்வலத்தின் போதும் மட்டும்தானே ஒற்றுமை கோசத்தை எழுப்புகின்றீர்கள்? ஏன் இதே ஒற்றுமை கோசம் சாதாரண நேரங்களில் எழ மறுக்கின்றது?



சமார் குறைந்தது 10,000 முஸ்லிம்கள் (இது சரியான கணக்கல்ல) உள்ள முத்துப்பேட்டையில் அணைத்து ஜமாத்துகளும் ஒன்று சேர்ந்து பொதுநலன் கருதியும், ஊரிண் நலன் கருதியும் சரியாண முடிவு எடுக்க முடிகின்றதா? அவ்வாறு எடுக்கும் முடிவுக்காவது உங்களால் கட்டுபட்டு நடக்க முடிகின்றதா?



ஒரு வழுவான அணைத்து ஜமாத்தை உருவாக்க முதலிலே நம்மால் முடிகின்றதா? அப்படி உருவாக்கினால்தான் நம் சகோதரர்கள் நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றோமா?



காயல்பட்டினம் போன்ற பகுதிகளை பாருங்கள் “ஜமாத்” பொது வேட்பாளரை தேர்ந்தெடுத்து பதவிகளுக்கு அனுப்புகின்றது. இது முத்துப்பேட்டை போன்ற முஸ்லிம்களின் ஊர்களில் நிறைவேற எவ்வளவு நேரம் ஆகப்போகின்றது? ஆனால் முயற்சி இல்லை.



நமக்கு அருகாமையில் இருக்கும் அதிராம்பட்டினத்தில் சம்சுல் இஸ்லாம் என்ற வழுவான சங்கம் பொதுநலன் கருதி வேட்பாளாரை தேர்ந்தெடுத்து வெற்றி பெற வைக்க முடிகின்றது, கீழக்கரையில் ஜமாத்துகள் இணைந்து பொது வேட்பாளரை தேர்ந்தெடுக்கின்றது உடனே இயக்கங்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து ஒதுங்குகின்றன. இதே நிலை முத்துப்பேட்டையில் நடக்காதா? முயற்சி செய்வோம்… வெற்றி பெறுவோம்.. இனி வரும் காலங்களிலாவது சகோதரர்கள் குறிப்பாக ஜம்மாத்தார்கள் தாங்கள் பொறுப்புணர்வுகளை உணர்ந்து நடப்போம்.



இதற்கெல்லாம் தீர்வுகான முத்துப்பேட்டை சகோதரர்கள் தயாறா? அல்லது ஒற்றுமையை வெறுமனே வார்த்தையிலும், எழுத்திலும் மட்டுமே காட்டிக்கொண்டு இருக்கப்போகின்றோமா?



கூடி உழைத்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்து கொள்வோமா?



அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியை தருவானாக…



– அமீரகத்திலிருந்து முத்துப்பேட்டை முகைதீன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக