
பல்வேறு சோதனைகளுக்கு மத்தியிலும், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும், தன் சொந்த சமுதாயத்தினரின் காலை வாரிவிடும் துரோக செயல்களுக்கு மத்தியிலும், பல்வேறு வசைபாடல்களுக்கு மத்தியிலும் வெற்றி பாதையை நோக்கி தமுமுகவை அழைத்து சென்று வீரநடை போடவைத்த தமுமுகவின் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் கிட்டதட்ட 15 ஆண்டுகள் பதவிவகித்த பேராசிரியர்.முனைவர்.எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களும், அண்ணன் செ.ஹைதர் அலி அவர்களும் தமுமுகவின் கொள்கை விதிகளின் படி தலைவர் மற்றும் பொது செயலாளர் பதவியிலிருந்து தற்பொழுது விடுபடுகின்றார்கள்.
தடைகளை தகர்த்த வரலாறும், அடக்குமுறைகளை கண்டு வீருகொண்டு எழுந்த வீரியத்தையும் த.மு.மு.கவுக்கு பெற்றுக்கொடுத்த பெறுமை இவர்கள் இருவரையும் சாரும் என்றால் அது மிகையாகாது. அப்படிபட்ட கம்பீரத்தோடு தனக்கே உரியபானியில் தொடர்ந்து சமுதாய பணியாற்றி வந்து கொண்டிருக்கும் த.மு.மு.க வின் அடுத்த தலைவர்களுக்கு இவர்கள் இருவர்களும் வழிவிட்டு மூத்த தலைவர்களாய் இருந்து இன்ஷா அல்லாஹ் வழிநடத்துவார்கள்.
எத்தனை எத்தனை போராட்டங்கள், எழுச்சி மிகுந்த ஆர்பாட்டங்கள், ஒற்றை கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாடுகள், எண்ணிலடங்கா பொதுக்கூட்டங்கள், தமிழகளவில் பிரமாண்ட மாநாடுகள் என தடைகளை உடைத்தெரிந்தே களம் அமைத்தவர்கள், சிதறிக்கிடந்த முஸ்லிம் சமுதாயத்தை தனது உரிமைக்காக போராட்டக்குணத்தோடு படைகளாக புறப்படவைத்தவர்கள், நமது உரிமைகளுக்காக அரசு கதவுகளை தட்டுவோம் சினங்கொண்டுவா என சமுதாயத்துக்கு அறைகூவல் விடுத்தவர்கள், தங்களது குருதிகளால் தமிழகத்தில் மனிதநேயத்தை மலரச்செய்தவர்கள், அவசர உதவிகளுக்கு சாதி,மதம் பாராது ஓடோடி உழைக்கின்றவர்கள் என கம்பீர மிடுக்கை த.மு.முக வுக்கு உருவாக்கிய தலைவர்கள் வழிவிடுகின்றார்கள் அடுத்த தலைமுறையினர்களுக்கு....
யா அல்லாஹ் எந்த சுயநலமும் இல்லாமல் சமுதாயத்துக்காய் அயறாது உழைத்த, உழைக்க இருக்கின்ற த.மு.மு.க வின் சமுதாய போராளிகள் அணைவருக்கும் நீண்ட ஆயுளையும், நிறைந்த செல்வத்தையும் தந்து தொடர்ந்து சமுதாயத்திற்கு போராட வழிவகுத்துத்தருவாயாக....
தற்பொழுது த.மு.மு.க மற்றும் ம.ம.க வின் புதிய நிர்வாகிகளாக...
தலைவர்- மவ்லவி. அண்ணன்.ஜே.எஸ்.ரிஃபாயி ரஷாதி
பொதுச் செயலாளர் – அண்ணன்.பி.அப்துல் சமது
பொருளாளர் – அண்ணன்.ஒ.யு.ரஹ்மத்துல்லாஹ்
ம.ம.க வின் பொதுச் செயலாளர் – அண்ணன்.எம்.தமிமுன் அன்சாரி
இவர்களின் பணி சிறந்து விளங்க எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் இரு கரம் ஏந்துகின்றோம்.
சமுதாய பாசத்துடன் முத்துப்பேட்டை முகைதீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக